டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* காவிரி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜோசப் விஜய் கருநாடகா வர வேண்டாம்: கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பால் பயணம் ரத்து!
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து கருநாடகாவில் போராட்டங்கள் வெடித்தன.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டில்லி மாணவர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை என்ற ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கூற்று பொய்யானது என காங்கிரஸ் குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெற்றோரின் வருமானமும் சொத்துகளும் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறினால், ஆடம்பர கார்கள் உள்ளிட்ட உயர்ந்த சொத்து நிலை கொண்டவர்களின் குழந்தைகள் ஓபிசி இட ஒதுக்கீடு சலுகைக்கு தகுதியற்றவர்கள் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
தி இந்து:
* ராமன் கோயில் காணிக்கை திருட்டு விவகாரத்தை கண்டித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாடக வடிவில் போராட்டம் நடத்தினர். ராகுல் காந்தி, அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* பாஜக ஆட்சியில் தொடரும் வினாத்தாள் கசிவு: பாஜக ஆளும் ஒடிசாவின் எம்.கே.சி.ஜி. மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவத் தேர்வு வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த நிகழ்வுக்குப் பாஜக அரசே பொறுப்பு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, கடுமையான நடவடிக்கை கோரியுள்ளன.
தி டெலிகிராப்:
* போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது எப்.அய்.ஆர்., காவல்துறை அறிவிக்கை, சமூக ஊடகக் கணக்கு முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஒன்றிய அரசு ஜென் சி (‘GEN Z’) இளைஞர்களை குறி வைக்கிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்ற அரசின் உறுதி மீறப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘வந்தே மாதரம்’ அவமதிப்பை குற்றமாக்கும் மசோதா மூலம் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு ஹிந்து தெய்வ வழிபாட்டை பாஜக திணிக்க முயல் கிறது என ஒவைசி குற்றம்சாட்டினார்; இம்மசோதா இந்தியாவின் மதச்சார்பற்ற அடித்தளத்திற்கு எதிரான மோசடி என ஆ.ராசா (திமுக) விமர்சனம்.
– குடந்தை கருணா
