வனவேந்தன் தாயார் சங்கியம்மாள் மறைவு: மருத்துவமனைக்கு உடல் கொடையாக வழங்கப்பட்டது

Viduthalai
1 Min Read

அரசியல்

புதுக்கோட்டை, மார்ச் 13- ஒசூர் மாவட்டத் தலைவர் வனவேந்தனின் தாயார் சங்கியம்மாள். 27ஆண்டுகளுக்கு முன்பே தனது உடலைக் கொடை செய்வதற்கான உறுதிப்பத்திரம் அளித்தவர் ஆவார்.  

சங்கியம்மாள் தனது மற்ற மகன்கள், மகள், பேரக்குழந்தைகளுடன் புதுக்கோட்டையில் தான் வசித்து வந்தார். சங்கியம்மாள் 84-வயதில் கடந்த 10.3.2023 அன்று மறைந்தார். 

அம்மையார் அவர்கள் 27ஆண்டுகளுக்கு முன்பே தனது இறுதி நிகழ்வு இப்படித்தான் நடக்க வேண்டும் என உயில் எழுதி வைத்துச் சென்ற செய்திபடி அவ ருக்கு எந்தவிட மூடப் பழக்க வழக்கச் சடங்குகளையும் செய்யாமல் கழகப் பொறுபபாளர்களின் நினைவேந்தல் உரைக்குப் பின் மருத்துவக் கல்லூ ரிக்கு கொடையாக அளிக் கப்பட்டது. மருத்துவக் குழுவினர் உடலைப் பெற்றுக் கொண்டு அதற்கான சான்றிதழையும் வனவேந் தனிடம் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் புதுக் கோட்டை மாவட்ட தி.க.தலைவர் மு.அறி வொளி, அறந்தாங்கி மாவட்டச்செயலாளர் முத்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், ப.க மாவட் டத்தலைவர் மு.தர்ம சேகர், சந்திரன், செல்வம், க.மாரிமுத்து, பா.வைரம், மாநில ப.க துணைத் தலைவர் அ.சரவணன், மண்டலச் செயலாளர். சு.தேன்மொழி, ஆ.சுப்பையா, செ.இராசேந்தி ரன், சு.கண்ணன், தர்ம ராசு ரெ.மு.தருமராசு, இளங்கோ, பூ.சி.இளங்கோ, சின்னச்சாமி, முருகன், வெற்றிச்செல்வன், பு.ஆம்ஸ்ட்ராங்க், ம.மு.கண்ணன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *