கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.7.2026

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* டில்லியில் வைகோ நூல் வெளியீட்டு விழா, முதலமைச்சர் ஜோசப் விஜய் புறக்கணிப்பு; அலுவல் பளு காரணம் என அறிவிப்பு.

* தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020இன் இலக்கான 2035-க்குள் உயர்கல்வியில் 50% மொத்த சேர்க்கை விகிதத்தை (Gross Enrolment Ratio – GER) இந்தியா அடைய முடியும் என்று சென்னை அய்.அய்.டி. இயக்குநர் பேரா. வி. காமகோடி தெரிவித்தார். (தமிழ்நாடு தற்போதே அந்த இலக்கை அடைந்து விட்டது).

* பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் வினாத்தாள் கசிவு: மகாராட்டிரா பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் மருந்து ஆய்வாளர் தேர்வு வினாத்தாள் கசிவு; இதே போன்று குஜராத் ஆயுர்வேத மருத்துவ படிப்பு வினாத்தாள் கசிவு. விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை.

* டில்லி போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்; காவல்துறையினரின் அத்துமீறலை நியாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

* இன்றைக்குள் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் வேண்டும். வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்: ஒன்றிய அரசுக்கு கரப்பான் பூச்சி கட்சி எச்சரிக்கை

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* கட்சித் தாவல் தடை சட்டம் குறித்து கபில் சிபல் மனு, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு.

* மதம் மாறியவர்கள் மீதான எஸ்.சி. தகுதிநிலை விவகாரம்; முந்தைய தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது: மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி. ஆந்திர உயர்நீதிமன்றம், ‘‘சிந்தாதா ஆனந்த் பால், ஒரு கிறிஸ்தவர், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னர் பட்டியல் ஜாதி சமூகத்தின் உறுப்பினர் என்ற தகுதியை இழந்துவிட்டார்’’ என்று தீர்ப்பு வழங்கி இருந்தது

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி. அரசுப் பேருந்து, சிவகாசி வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தருவீர்களா? தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியில் உயிரிழப்புகள்: 5 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்ற அறிவிக்கை, 4 வாரங்களுக்குள் விளக்கப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டு, அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது என்பதையும் விளக்குமாறு எச்சரிக்கை!

தி இந்து:

* அயோத்தி ராமன் கோயிலில் நன்கொடை மோசடி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முழுமையாகவும், பாரபட்சமின்றியும் நடைபெற, மறுசீரமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவில் (SIT) ஒரு சார்பற்ற தடயவியல் கணக்குத் தணிக்கையாளரை இணைக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

* நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஅய் வழக்குரைஞர் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு.

தி டெலிகிராப்:

* போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கியதால் காவல்துறை தொல்லை – சட்டக் கல்லூரி மாணவர் குற்றச்சாட்டு. 35 நாள்கள் ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கியதற்காக, தனது குடும்பத்தினரை உத்தரகாண்ட் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து தொந்தரவு செய்கின்றனர் என்று காசியாபாத் சட்டக் கல்லூரி மாணவர் முகமது சுனைத் முல்லிக் குற்றம்சாட்டியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* சட்ட உதவிக்கு ரூ.1 கோடி நிதி; போராட்டக்காரர் களுக்கு வழக்குரைஞர்களை இணைக்கும் இணைய தளம் – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு. போராட்டம் முடிந்த பிறகும் கைது மற்றும் வழக்குகள் தொடர்வதாகக் கட்சி குற்றச்சாட்டு.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *