திருநெல்வேலி, ஜூலை 28– திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் எதிர்வரும் பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவது தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ் தாய் வாழ்த்தும் ஆளுநர் உத்தரவின் படி பாடப்படும் என நிகழ்ச்சி நிரலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெளி யிட்டிருந்தார்.
தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவது பாடப்படும் என்ற அறிவிப்பு வெளி யிட்டுள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் துணை வேந்தர், தமிழ்நாடு ஆளுநர் ஆகியோரை கண்டித்து திருநெல்வேலி வழக்குரைஞர்கள் சங்க முன்னாள் செயலாளர், சமூக நீதிக்கான வழக் குரைஞர், ப.செந்தில்குமார் தலைமையில், அனைத்திந் திய நீதிக்கான வழக்குரை ஞர் சங்கம் தோழர் வழக்குரைஞர் ரமேஷ் முன்னிலையில் திருநெல் வேலி மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்கள் கருப்புக் கொடி காட்டியும், தமிழ் தாய் வாழ்த்து பாடியும், தமிழ் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பினை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் எனக் கோரினர்.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கக்கூடிய தமிழ்நாடு ஆளுநர், பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழ் மொழி, தமிழர் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை செய்யக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
பல்கலைக்கழக நிர்வாகம், தமிழ்நாடு ஆளுநர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வில் தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாடவும் கோரிக்கை முழக்க மிட்டனர்.
இந்நிகழ்வை சமூக நீதிக்கான வழக்குரை ஞர் அ.பிரபாகர் ஒருங் கிணைத்தார். இதில் மூத்த வழக்குரைஞர்கள், அப்துல் நிஜாம், இளமாறன் கோபால், கொம்பையா, உத்தர நாயகம், கதிரவன் மற்றும் இளம் வழக்குரைஞர்கள் தமிழர் சட்ட இயக்க தலைவர் பார்த்திபன், சரவண டிக்சன், ஜோதி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
