ஊற்றங்கரை, ஜூலை 27- ஊற்றங்கரை கழகத்தோழர் இரவீந்தரன் உடல்நலம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.செய ராமன், மாவட்ட கழக நிர்வாகிகள் நேரில் நலம் விசாரித்தனர்.
கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் திருவனப் பட்டி கழகத்தோழர் இரவீந்திரன் (சென்னை ஆவடி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்) கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பாக சென்னையிலிருந்து ஊருக்கு வந்தவர் ஊற்றங்கரை சேலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து ஊற்றங்கரை செல்லும்போது சாலை விபத்து ஏற்பட்டு பலத்த அடிப்பட்டு சுயநினைவு இழந்து ஓர் அறுவை சிகிச்சை மேற்க்கொண்டு சற்று உடல்நலம் (தேர்ந்து) பெற்று அவரது திருவனப்பட்டி இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
25.07.2026 அன்று மதியம் அவரது இல்லத்திற்கு (சென்று) கிருட்டினகிரி மாவட்ட கழக நிர்வாகிகளுடன் திராவிடர் கழக மாநில ஒருங்ணைப்பாளர் ஊ. செயராமன், மாநில ப.க.பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் வ.ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன், ஊற்றங்கரை ஒன்றியச் செயலாளர் செ.சிவராஜ், மேனாள் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் எம்.சிலம்பரசன், கா.ஞானசேகரன் ஆகியோர் உடல்நலம் குறித்து அவரது தந்தை, தாய், தங்கை ஆகியோரிடம் அவரது நலம் விசாரித்து கழகத்தோழர் இரவீந்திர னின் மருத்துவ செலவிற்காக கீழ்கண்டவர்கள் நிதிஉதவி வழங்கிய விவரம் பின்வருமாறு.
திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை. செயராமன் ரூ. 3,300, மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர் அண்ணா.சரவணன் ரூ. 2000 கழக காப்பாளர் பழ.பிரபு ரூ. 2,000, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ரூ. 2,000, மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி ரூ.1,000, மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம் ரூ..1,000, மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட ப.க. அமைப்பாளர் இராம.சகாதேவன் ரூ. 1,000, ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமிரூ.1,000, மேனாள் ப.க.நிர்வாகி சித.வீரமணிரூ.1,000, ஊற்றங்கரை ஒன்றிய இளைஞரணி து.தலைவர் கோ.சரவணன் ரூ.1,000, தொழிலாளரணி மாவட்டத் தலைவர் சி.வெங்கடாசலம் ரூ. 500, மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன் ரூ.500, ஒன்றியச் செயலாளர் வி.திருமாறன் ரூ.500, ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் ரூ. 500, மேனாள் மண்டல இளைஞரணி செயலாளர் பொடார் மு.சிலம்பரசன் 500, மாவட்ட மகளிரணி தலைவர் முருகம்மாள் ரூ.500, போச்சம்பள்ளி கா.ஞானசேரன் ரூ.500, பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன் ரூ.200, உள்பட ஆகமொத்தம் ரூ.20,000 மட்டும் இரவீந்திரன் மருத்துவ செலவிற்காக அவரது குடும்பத்தாரி டம் கழக நிர்வாகிகள் வழங்கினர்.
மேலும் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வுள்ளது. எனவே வாய்ப்பு உள்ள கழகத்தோழர்களும், பொறுப் பாளர்களும் தங்களால் இன்ற நிதி உதவியை வழங்க வேண்டுமாய் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
