பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம் தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:
கோடம்பாக்கம் – தென்சென்னை
பகுத்தறிவாளர் கழக தென்சென்னை மாவட்டம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய, ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை – நூல் வெளியீட்டு விழா 19.07.2026 மாலை 6.30 மணியளவில் தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு. இரா.மாணிக்கம் தலைமையில், கோடம்பாக்கம் படைப்பு அரங்கத்தில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத்தலைவர் மு.இரா.மாணிக்கம் தலைமையுரை ஆற்றினார். நூல்களை, திராவிடர் கழக செயலவைத்தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களும், தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் செயலாளர் முனைவர் த.கு.திவாகரன் அவர்களும், கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடமிருந்து, பெற்றுக் கொண்டார்கள்.
விழாவில், – துவக்க உரையை, திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ,அன்புராஜ் ஆற்றினார்கள். பொதுச்செயலாளர் அவர்கள், தன் உரையில், 1925இல் மூன்று இயக்கங்கள், கட்சிகள், தோற்றுவிக்கப்பட்டன. தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம், நாக்பூரில் ஆர்எஸ்எஸ் என்ற ராஷ்டிரிய சுயமசேவக், பொதுவுடைமைக் கட்சி என்று, மூன்று இயக்கங்கள் தோன்றின.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், ஜாதியை ஒழிப்பது, சமூகநீதியைக் காப்பது. ஆர்எஸ்எஸ் இயக்கம் – வர்ணாசிரமத்தை பாதுகாப்பது,ஜாதி முறையைக் கட்டமைப்பது. இந்த இரண்டு இயக்கமும் ஒரே நேரத்தில் தோன்றியது உங்கள் எல்லோருக்கும் தெரியும் – ஆர்எஸ்எஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது? திராவிடர் கழகம், என்ன செய்து கொண்டிருக்கிறது? திராவிடர் கழகம், மிகவும் வெளிப்படையான இயக்கம். ஆனால், இதற்கு நேர் மாறான, வெளிப்படைத்தன்மையே இல்லாத இந்த ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று குறிப்பிட்டார்கள். தந்தை பெரியார், தான் சொன்னதை, கடைப்பிடித்தார்.
போராட்டத்தை, தெளிவாக அறிவித்து விட்டு தான், போராட்டம் நடத்தினார். ஆர்எஸ்எஸ் – பேசுவது ஒன்று, செய்வது ஒன்று, என்று குறிப்பிட்டார்.
இந்த நூல் பற்றி குறிப்பிடும் போது, இந்த நூல், செப்டம்பர் 2021இல் முதல் பதிப்பு வெளிவந்தது. 30 நாட்களில், ஏழு பதிப்புகளைக் கண்ட நூல் இது. 176 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை, ஆசிரியர், ஓர் ஆய்வுரையாகத் தான் எழுதி இருந்தார். இதுவரை 1352 நூல்கள், தமிழ்நாடு முழுவதும், வெளியாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், என்று குறிப்பிட்டார். மேலும், பொதுச்செயலாளர் அவர்கள், தன் துவக்க உரையில், டிரோஜன் குதிரை பற்றியும், கணினியில் பரவும் டிரோஜன் என்ற வைரஸ் பற்றியும் ஒப்பிட்டு, இவ்வாறு பேசினார்: கணினியில் பரவி, அதன் தரவுகளை அழிக்கக் கூடிய, டிரோஜன் என்ற வைரசை, டிரோஜன் என்ற மரக்குதிரை மூலம், சூழ்ச்சியால், கிரேக்கர்கள், டிரோஜன் நாட்டில் புகுந்து கைப்பற்றியதை, ஒப்பிட்டு பேசினார்.
விவேகானந்தர் – மனோன்மணியம் சுந்தரனார் சந்திப்பின் போது, விவேகானந்தர், சுந்தரனாரிடம், உங்கள் கோத்திரம் என்ன என்று வினவியதையும், சுந்தரனார், கடும் கோபம் கொண்டார்என்பதையும் குறிப்பிட்டு, விவேகானந்தரின் ஜாதி வெறியை வெளிப்படுத்தினார். ஆசிரியர் அவர்கள் புத்தகத்திற்கு பெயர் வைக்கும் போது, மிகவும் பொருத்தமாக, அருமையாக இருக்கும்படி தான் வைப்பார்கள், என்று குறிப்பிட்டார். நூலைப்பற்றிய பல முக்கிய தகவல்களையும், நூலின் சிறப்புகளையும், சுருக்கமாகவும், அனைவருவரும் புரிந்து கொள்ளும் படியாகவும், மிகவும் எளிமையாகப் பேசினார்.

அடுத்து, இந்த நூலை திறனாய்வு செய்து, ஆர் எஸ் எஸ், – பார்ப்பனியத்தை எப்படி பாதுகாத்து வருகிறது என்பதை திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, நூலறிமுக உரையாற்றினார். மேலும், தனது ஆய்வுரையில், திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள், ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பு நாட்டில், ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டதைக் குறிப்பிட்டு, ‘டிரோஜன் குதிரை உள்ளே வந்து விட்டது. இப்போது, நாம், அந்த கதவைத் திறந்து விடப்போகிறோமா? அல்லது, அந்தக்கதவுகளில் ஆணி அடித்து, அப்படியே விடப் போகிறோமா? என்ற கேள்வியை எழுப்பி, எல்லோரையும், சிந்திக்க வைத்தார். மேலும், புத்தகத்தில் உள்ள பல்வேறு செய்திகளையும் விளக்கி, ஆர்எஸ்எஸ் எப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதையும், ஸநாதன் சன்ஸ்த்தா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோலகர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரை எப்படி கொன்றார்கள். இவர்கள் யார்? இவர்கள் பின்னணி என்ன, இந்து யுவவாகினி, பஜ்ரங்தள், போன்ற ஆர்எஸ்எஸ்- ன் வேறு அமைப்புகள் பற்றி பல்வேறு தகவல்களையும் சொல்லி, ஆசிரியர் அவர்கள், இந்தப் புத்தகத்தை எப்படி வடிவமைத்திருக்கிறார் என்பதையும், ஆசிரியர் அவர்களின் கடுமை யான உழைப்பையும்,விளக்கமாகப் பேசினார்.
இந்த நிகழ்வில், பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழக மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள், கல்லூரி மாணவர்கள், அமைப்பு சாராதவர்கள், கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் பா.வேணுகோபால், நன்றியுரை ஆற்றினார். விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா- கருத்தரங்கு கூட்டம் 19.07-2026 அன்று மாலை 6.மணிக்கு நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம் அருகில் விபிஎன் மூன்றாவது தளம் விடுதி கூட்ட அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் மு.க.ஜீவா, தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் இரா.தியாக சுந்தரம், அனைவரையும் வரவேற்று பேசினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்கள் புயல் சு. குமார், இரா. முத்துக்கிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ந.எழில ரசன், நூலினை அறிமுகம் செய்து விளக்கிப் பேசினார் பேசுகையில் “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூலை தற்போது அறிமுகம் செய்வதற்கு அவசியம் உண்டு. ஆசிரியர் அவர்கள் சரியான நேரத்தில் தற்போது பகுத்தறிவாளர்களிடம் ஒப்படைத்து கருத்தரங்கு மட்டுமல்லாமல் நூலினை பெற்று படித்து பலவகையில் பலருக்கும் பரப்பப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு, நூல் முழுவதுமே சுட்டிக்காட்டி ஆர்.எஸ்.எஸ். கோர முகத்தையும் மூன்று முறை தடை செய்யப்பட்ட காரணங்களையும், ஆண்டுகளையும் விலக்கிப் பேசினார்.
மாவட்ட கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

ப.க. தோழர் அங்காடி சேகர், காரை வானொலி வாசிப்பாளர் இரா. சுந்தர பாண்டியன், மாவட்ட கழக மகளிர் பாசறை தலைவர் தெ.கவிதா, மாவட்ட மகளிர் அணி தலைவர் பு.அலமேலு, நாகவள்ளி-ஜீவா, திமுக மு.க.சோமு, மு. பத்மநாதன், திமுக இலக்கிய அணி ஆர்.கே.பிரதீப், கு.சிவானந்தம், எம்.ஆர். சுப்பிரமணியன், கழக மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஆர். அறிவுமணி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் செ.பாக்கியராஜ், நாகை நகர் செயலாளர் சண்.ரவிக்குமார், பெ.யாகப்பா, கவிஞர் நாகை நாகராஜன், பா.ஞானமணி மு.லோகநாதன் என்.தினகரன், சீமான். எஸ். கணேசன், கேப்ஸ் டி.என்.எஸ்.ரவி, மு.க.சம்பத், ஆகியோர் நூலினை பெற்றுக் கொண்டு உரையாற்றினர். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, நிகழ்வினை நெறிப்படுத்தினார். திருமருகல் ஒன்றிய செயலாளர் சு.இராஜ்மோகன், நன்றி கூறினார்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா 26.7.22026 அன்று மாலை திருத்தணி சித்தூர் சாலையில் அமைந்துள்ள ஜே.பி.ஆர். மகாலில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கி.எழில் தலைமை வகித்தார். திராவிடர் கழக திருத்தணி நகர இளைஞரணி செயலாளர் தங்கத் தமிழன் வரவேற்புரை நிகழ்த்தினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.நீ. வீரமணி தொடக்க உரையாற்றினார்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் அரக்கோணம் பு. எல்லப்பன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி நூல் குறித்த திறனாய்வு உரையாற்றினார்.
அவர் தனது உரையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தோற்றம், அதன் இந்துத்துவ அரசியல் கருத்தியல், பல்வேறு துணை அமைப்புகள் மூலம் சமூகத்தில் செயல்படும் விதம், இளைஞர்களிடம் கருத்தியல் பரப்புரை மேற்கொள்ளும் அணுகுமுறைகள் உள்ளிட்ட அம்சங்களை நூலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் சான்றுகள் மற்றும் ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் விரிவாக விளக்கினார். மேலும், சமூகத்தில் மறைமுகமாக தனது கருத்தியலைப் பரப்பி, அப்பாவி இளைஞர்களை தனது சிந்தனை வலையில் ஈர்க்கும் முயற்சிகள் குறித்து எடுத்துரைத்த அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மை முகத்தையும் அதன் செயல்பாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆய்வு நூலாக “ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை” அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பகுத்தறிவு, சமூகநீதி, சுயமரியாதை, மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை மக்களிடையே வலுப்படுத்தும் பணியில் திராவிடர் கழகம் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் இந்நூலைப் படித்து உண்மை நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் சு.லோகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் அறிவுச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் இரா.ஸ்டாலின், தேசய்யா, சு.கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அப்சல் அகமது, பிரசன்னா, பாசறை இதழின் பொறுப்பாளர் க.புவியரசு,மாவட்ட இளைஞரணி தலைவர் க.ஏ. தமிழ்முரசு, சத்திரஞ்செயபுரம் மணி, முருகேசன், மகளிரணி தோழர்கள், பெரியார் பிஞ்சுகள் மற்றும் திராவிடர் இயக்கத் தோழர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பெரியார் பிஞ்சு முகிலரசி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமானோர் “ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூலை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். பகுத்தறிவு சிந்தனையைப் பரப்பி, சமூகநீதி மற்றும் சுயமரியாதைக் கொள்கைகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி, பங்கேற்றவர்களின் பாராட்டைப் பெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ப.க. சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய “ஆர். எஸ். எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – அரங்க கூட்டம். 25.07.2026 அன்று மாலை 5.30 மணியளவில் பெரியார் இல்லம்,சாம நகர், திருப்பத்தூரில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கவிஞர் நா. சுப்புலட்சுமி (மாவட்டத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) தலைமை வகித்தார். வே. அன்பு (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரையாற்றினார்.
கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்), எ.அகிலா (மாநில மகளிரணி பொருளாளர்), அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.க.), சி.தமிழ்ச்செல்வன்(மாவட்ட துணைத் தலைவர்), சி.எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), காளிதாஸ் (நகர தலைவர்), எம்.என்.அன்பழகன் (மாவட்ட தலைவர் வி.வா.வட்டம்), வ.புரட்சி (மாவட்டச் செயலாளர் வி.வா.வட்டம்), எம்.என். அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர் வி.வா.வட்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இணைப்புரையினை பெ கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) வழங்கினார்.
தொடக்கவுரையினை ஊ. ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர் வழங்கினார். வழக்குறிஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசரை செயலாளர்) சிறப்புரையாற்றினார். மேலும் அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர்), தலைமை ஏற்ற நா.சுப்புலட்சுமி (மாவட்டத்தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றி யோர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ஆர். எஸ். எஸ். என்னும் டிரோஜன் குதிரைகள் புத்தகம் 2021 ஆண்டு செம்டம்பர் 4இல் முதல் பதிப்பாக வெளிவந்து 2026இல் தற்போது 9ஆவது பதிப்பாக வெளிவந்துள்ளது. இத்தனை பதிப்புகள் வெளிவந்த நிலையில் இப்புத்தகம் இது வரை பலலாயிரம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. மேலும், இப்புத்தகத்தின் அட்டைப் படத்திலுள்ள டிரோஜன் குதிரையின் வரலாறு துவங்கி புத்தகங்களுக்குள் 13 தலைப்பின்கீழ் ஆசிரியர் அவர்கள் ஆர். எஸ். எஸ். என்ற சமூக விரோத இயக்கம் எந்தெந்த வகையில் ஊடுருவி இச் தமிழ் சமூகத்தை சீரழிக்கிறது என்பதை பற்றி எழுதியிருந்ததை குறிப்பிட்டு விளக்கி பேசினார்கள்.
மேலும், ஜாதிய பாகுபாடு இழிவு ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்திலிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தொண்டருக்கே எவ்வகையில் ஏற்பட்டது. அவர் அவ்வியக்கத்திலிருந்து விலகிய சம்பவங்களை குறித்து விளக்கி பேசினார்கள்.
பங்கேற்ற அனைத்து தோழர்களும், குறிப்பாக ஜென்ஸி தலைமுறை மாணவர்கள் மிக ஆர்வமாக இப் புத்தகத்தை வாங்கினார்கள். ‘ஆர். எஸ். எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ 50 புத்தகமும், ‘ஆர். எஸ். எஸ். பற்றி’ என்னும் சிறிய புத்தகம் 50 விற்றுத் தீர்ந்தன. மேலும் இப் புத்தகம் வேண்டுமென்று முன் பதிவு செய்து விட்டுச் சென்றார்கள்.
இதில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள்.
கமலம்மாள் (கழக காப்பாளர்) சி. தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத்தலைவர்) காளிதாஸ் (நகர தலைவர்) எம். ஞானம் (விடுதலை வாசகர் வட்டத் தலைவர்) வ. புரட்சி (விடுதலை வாசகர் வட்டச் செயலாளர்) எம். பெருமாள்சாமி (விடுதலை வாசகர் வட்ட ம்) ஏ. டி. சித்தாரத்தன் (மாவட்ட துணைச் செயலாளர்) விஜயா அன்பழகன் (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) இரா. கற்பகவள்ளி (மாவட்டத் தலைவர் மகளிரணி) தாமரை (நகர காப்பாளர் மகளிரணி)நா. சுப்புலட்சுமி சி. சபரிதா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) வெ. அன்பு (மாவட்டத்தலைவர் ப. க) பெ. ரா. கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்) இராஜேந்திரன் (சோலையார்பேட்டை அமைப்பாளர்) மோ. நித்தியானந்தம் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) கே. மோகன் (மாவட்ட தலைவர் பெரியார் கட்டுமான தொழிலாளரணி) அக்ரி அரவிந்த் (நகர இளைஞரணி செயலாளர்) மு. வெற்றி (மாதனூர் ஒன்றியத் தலைவர்) சரவணன் (இலக்கிநாயக்கன்பட்டி கிளைத்தலைவர்)லட்சுமணன்(லக்கிநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர்) பிரபாகரன் (கற்பிபயிலகம்) அன்பு (நகர மாணவர் கழக செயலாளர்) தசரதன் (கல்நார்சன்பட்டி பொறுப்பாளர்) மாணவர் கழக சேர்ந்த தோழர்கள் தர்சினி, லாவன்யா, கோமலேசுவரி, துருவன் ஆகியோர் பங்கேற்றனர். கோ. திருப்பதி (மாவட்டச் செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) நன்றியுரை வழங்கினார். இப்புத்தக நிகழ்விற்கு வருகை தந்தவர்களுக்கு இரவு சிற்றுண்டி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.
