வாகனப் பரப்புரைக் குழுவினரை எழுச்சியுடன் வரவேற்று நிறைவுப் பொதுக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்திடுவோம் பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

2 Min Read

பட்டுக்கோட்டை, ஜூலை 26- ‘‘நீட்” தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி வருகை தரும் வாகனப்பரப்புரை குழுவினரை எழுச்சியுடன் வரவேற்று நிறைவு பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்திட பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 24.7.20226 அன்று மாலை 6.30 மணி அளவில் பட்டுக்கோட்டை நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

பொதுக் குழு உறுப்பினர் இரா. நீலக்கண்டன், கடவுள் மறுப்பு கூறினார்.

மாவட்ட செயலாளர் கா.தென்னவன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமையேற்று கூட்டத்தின் நோக்கங்களை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய இயக்க பணிகள் குறித்தும், நீட் EWS ரத்து செய்ய வலியுறுத்தி வருகை தரும் இருசக்கர வாகன பரப்புரை வரவேற்பது குறித்தும், பிரச்சார நிறைவு பொதுக் கூட்டத்தை சிறப்பாக நடத்திட அதற்கான முன் ஏற்பாட்டுப் பணிகள் விளம்பரம் செய்தல் குறித்தும் உரையாற்றினார்.

மாவட்ட காப்பாளர் பெ.வீரையன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, பெரியார் பெரும் தொண்டர் அ.காளிதாஸ், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆ.ரெத்தினசபாபதி, ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

தொடர்ந்து மாவட்ட துணைச் செயலாளர் சோம. நீலக் கண்டன், நகரத் தலைவர் சு.அரவிந்த்குமார், நகர செயலாளர் குமரவேல், பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் சி.ரெங்கசாமி, மாவட்ட மாணவர் அணி தலைவர் து.பகுத்தறிவன், சேது ஒன்றிய தலைவர் ஜெகநாதன், சேதுபாவாசத்திர ஒன்றிய செயலாளர் சண்முகவேல், மதுக் கூர் ஒன்றியத் துணைத் தலைவர் ந.வை.இராதாகிருட்டிணன், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் சிவஞானம், மண்டலக்கோட்டை ஜி.சர வணன், ஆகியோர் கருத்துக்களை தெரிவித்தனர்.

மதுக்கூர் ஒன்றிய தலைவர் பெ.அண்ணாதுரை நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

ஜூலை-4 சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

“நீட்”, EWS உயர்ஜாதிருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணித் திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் நடைபெறும் இருசக்கர வாகன பரப்புரை பயணக் குழுவினரை பட்டுக் கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் எழுச்சியுடன் வரவேற்று நிறைவுக் கூட்டங்களை சிறப் பாக நடத்துவது. அதற்கான விளம்பர பணிகளை உட னடியாக செய்வது என தீர்மா னிக்கப்பட்டது.

தந்தை பெரியார் அவர்களின் (செப்டம்பர் 17) 148ஆவது பிறந்தநாள் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களின் (டிசம்பர் 2) 94ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பட்டுக்கோட்டை கழக மாவட்டம் , நகர. ஒன்றிய பகுதிகளில் சுவரெழுத்து விளம்பரங்களை செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *