குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க சென்னை மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்

2 Min Read

சென்னை, ஜூலை 25– சென்னை மாநகராட்சியில் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (24.7.2026) நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் ஜி.எஸ். சமீரன் தலைமையில், குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல், பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகளை (Out-of-School Children), பள்ளியில் சேர்த்து பாதுகாத்தல் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (24.07.2026) நடை பெற்றது.

இக்கூட்டத்தில் இணை ஆணையாளர் கள் செ.சரவணன், க.கற்பகம் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை

இக்கூட்டத்தில், பெற்றோர் பரா மரிப்பின்றி உள்ள குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல், குழந்தைகளின் மறுவாழ்வு ஆலோசனை சேவைகள், பாதுகாப்பு இல்லங்கள், மறுகுடியமர்வு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள் நியமித்தல், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், உடல் மற்றும் மனநல விழிப்புணர்வு, பள்ளிகளுக்கு அருகிலுள்ள போதைப்பொருள் பயன் பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள், ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்துதல், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பள்ளி இடைநிற்றலை முன்கூட்டியே கண்டறிய துறைகளுக்கிடையேயான தரவு பகிர்வு ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை முன்கூட்டியே அடை யாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, கல்வி மற்றும் மறுவாழ்வு சேவைகளை காலதாமதமின்றி வழங்கி, பள்ளியில் தொடர்ந்து கல்வி கற்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆணையாளர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ஆணையாளர் மாநகராட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்து, சமூக நலத் திட்டங்கள் மற்றும் இரவுநேர தங்குமிடங்களின் செயல்பாடுகளை மேலும் திறம்பட செயல்படுத்த தேவையான ஆலோ சனைகளை வழங்கினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *