கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.7.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மாணவர்களின் கவலை நியாயமானது; மாணவர்கள் மீது வன்முறை ஏவியது இரக்கமற்ற செயல் என்கிறார் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி.

* பிரதமரின் பதில் போதுமானதாக இல்லை நாடு தழுவிய அளவில் இன்று போராட்டம்: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அதிரடி அறிவிப்பு; அரசின் பேச்சுவார்த்தை அழைப்பு நிராகரிப்பு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* டில்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்காவில் மாணவர் அமைப்புகள் ஆதரவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 26 நாட்கள் நீடித்த காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்தார் சோனம் வாங்சுக். ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அவர் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்தார்.

* வினாத்தாள் கசிவு சர்ச்சை: உயர்கல்வித் துறைச் செயலர் மாற்றம்

* நாடு முழுவதும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உயர்கல்வித் துறைச் செயலர் மாற்றப்பட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வினாத்தாள் கசிவு விவகாரம் தீவிரம்: நாடு முழுவதும் போராட்டம் அறிவித்த சி.ஜே.பி.: வினாத் தாள் கசிவு பிரச்சினையில் சி.ஜே.பி. நாடு முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஒன்றிய அரசு 24 மணி நேரத்தில் நான்கு முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சி.ஜே.பி. அதனை நிராகரித்தது.

தி இந்து:

* மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையில் இருந்து பிரித்து, மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. ஹரிபரந்தாமன் வலியுறுத்தினார். மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது தரமான விவாதங்களைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

தி டெலிகிராப்:

* டில்லி போராட்ட பகுதிகளில் அலைபேசி இணைய வசதியை (மொபைல் டேட்டா) முடக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு.  போராட்டம் நடைபெறும் பகுதிகளில் மொபைல் இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், வியாபாரிகள் மற்றும் உணவகங்கள் டிஜிட்டல் கட்டணங்களை ஏற்க முடியாமல் சிரமம் ஏற்பட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* “செவ்வாய்க் கோள் சாதனைக்கு பாராட்டுப் பெறுகிறீர்கள்; மாணவர் போராட்டங்களுக்கு பொறுப்பும் ஏற்க வேண்டும்” – பிரதமர் மோடி மீது பிரியங்கா காந்தி சாடல்

* நாட்டின் சாதனைகளுக்கு பாராட்டு பெறும் பிரதமர், மாணவர் போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி விமர்சனம்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *