திட்டங்கள் புதிதல்ல! பெயர்கள் மட்டும் தான்!

2 Min Read

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.

இதுமட்டுமின்றி முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு தொடர்ந்து மாற்றி வருகிறது.

‘நான் முதல்வன்’ : அந்தவகையில் 2022 ஆம் ஆண்டு திமுக அரசால் மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயரை, ‘திறன் தமிழ்நாடு’ என மாற்றம் செய்தது.

‘மகளிர் விடியல் பயணம்’ : முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கானது. பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தில் இருந்து ‘விடியல்’ என்கிற சொல் நீக்கப்பட்டு, மகளிர் பயணம் என மாற்றப்பட்டது.

‘தாயுமானவர்’  திட்டம்: முதியோர்களுக்கு வீடு களுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கி வந்த முதல்வரின் தாயுமானவர் திட்டம், பெயரிலிருந்த ‘தாயுமானவர்’ என்ற சொல் நீக்கப்பட்டது. இதற்கு பதிலாக வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ : அந்த வரிசையில் தற்போது ‘முதல்வரின் காலை உணவுத்’ திட்டத்தின் பெயரை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்து தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களை தற்போதைய தவெக அரசு மாற்றி வருகிறது.

விபி ஜி ராம்ஜி திட்டம்? இதுமட்டுமின்றி தேர்தலுக்கு முன்பு நூறுநாள் வேலைத் திட்டத்தின் பெயரை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்) விபி ஜி ராம்ஜி திட்டம் என மாற்றியதற்கு அருண்ராஜ் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த பிறகு பாஜக பெயர் மாற்றம் செய்த அத்திட்டத்தின் பெயரையும், மாற்றப்பட்டுள்ள திட்டத்தின் கூறுகளையும் ஏற்றுக்கொள்வதாக தவெக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *