‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களை கைது செய்வது ஜனநாயக உரிமைக்கு எதிரானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம்

சென்னை, ஜூலை 23- “நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல்களை நெறிப்பது பாஜகவின் கல்விக் கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்து விடும்” என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசு அமலாக்கி வரும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நீட்தேர்வு வினாத்தாள் கசிவிற்கு காரணமான ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். தேசிய தேர்வு முகமை மூலம் தேர்வுகள் கூடாது, நீட் தேர்வில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டில்லியில் அறவழி போராட்டம் நடந்து வருகிறது.

சோனம் வாங்சுக் மீதான நடவடிக்கைக்குப் பின் மாணவர்கள் ஊர்வலம் நடத்திட முயற்சித்தனர். அவர்கள் மீது காட்டுமிராண்டித் தனமாக காவல்துறை தடியடி தாக்குதல் தாக்கியது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந் துள்ளனர். மாணவிகள் மீது மிகவும் கீழ்த்தரமான அணுகுமுறையை காவல் துறையினரும், துணை நிலை ராணுவ வீரர்களும் கையாண்டுள் ளனர். அனைத்தும் காட்சிப் பதிவு களாக வெளிவந்துள்ளது.

நெஞ்சம் பதைப்பதைக்கும் ஒன்றிய பாஜக அரசின் மிக மோசமான இந்த அடக்குமுறையை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல. சென்னையில் ஓரிடத் தில் அமர்ந்து போராட வழி யில்லாமல் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு காவல் துறையால் அலைக் கழிக்கப் படுகின்றனர். மூன்று நாட்களாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப் படுகின்றனர். காவல்துறை யின் இத்தகைய நடவடிக்கை போராடும் ஜனநாயக உரிமைக்கு எதிரானது.

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் வகுப்பை புறக்கணிப்பு செய்து போராடியுள்ளனர். காவல் துறை சென்னையில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர் மற்றும் கோவை, மதுரை, கடலூர், தஞ்சை உள்ளிட்ட பல நகரங்களில், கல்வி வளாகத்திற்குள் புகுந்து கைது செய்துள்ளது இதுவரை நடந்திராத செயல்.

இது மிக மோசமான அத்துமீறல் ஆகும். காவல் துறை கல்லூரி வளாகங்களுக்குள் சென்று மாணவர்களை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத அத்துமீறல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

போராடும் உரிமையை நசுக்கு கின்ற தமிழ்நாடு காவல்துறையின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். காவல்துறைக்கு பொறுப் பாக இருக்கிற மாநில முதலமைச்சர் ஜனநாயக உரிமைகள் சார்ந்த போராட்ட நடவடிக்கைகளை ஒடுக்க நினைக்கும் காவல் துறையை கட்டுப்படுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும், ஜனநாயக ரீதியில் அறப் போராட்டங்களை நடத்தும் போது, உரிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தவெக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்களின் ஜனநாயக குரல் களை நெறிப்பது பாஜகவின் கல்விக் கொள்கைக்கு துணை போவதாகவே அமைந்துவிடும். எனவே, தமிழ்நாடு காவல் துறையின் சட்ட விரோத அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *