தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம்

10 Min Read

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம் நடை பெற்றது. அதன் விவரம் வருமாறு:

கல்லக்குறிச்சி

கல்லக்குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற “ஆர்.எஸ்.எஸ்.எனும் டிரோஜன் குதிரை “நூல் அறிமுக விழா திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் நூல் அறிமுகம் செய்து எழுச்சி உரையாற்றினார்.

18/7/2026 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கல்லக்குறிச்சி சேலம் நெடுஞ்சாலை  எஸ்.எம்.கோபுர கட்டிட வளாகத்தில் “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை”நூல் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்ட பகுத்தறிவாளர்  கழகச் செயலாளர் வீர.முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவிற்கு மாநில கழக மருத்துவர் அணிச் செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார், மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட கழகக் காப்பாளர் முனைவர் ம.சுப்பராயன், கல்லை தமிழ்ச் சங்கத் தலைவர் செ.வ.புக ழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர். எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” எனும் நூலை அறிமுகம் செய்து எழுச்சி உரையாற்றினார்.

பெரியார் சுயமரியாதை இயக்கம் 1925 ஆம் ஆண்டு தோற்றுவித்தார். இதே ஆண்டு”ஆர். எஸ். எஸ்” எனும் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இவ் வியக்கம் நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் பதிவு செய்யப்படவில்லை.பதிவு செய்யப்படாத எந்த ஒரு இயக்க மும் நம்பகத்தன்மை உடையது அன்று; சட்டப்படி இயங்க முடியாது. ஆனால் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வியக்கம் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கமாகும். இருப்பினும் இவ் வியக்கம் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட பல அரசியல்வாதிகளால் தூக்கி நிலை நிறுத்தப்பட்டு இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் கேடு செய்யக்கூடிய வகையில் இயங்கி வருகிறது. இவ்வியக்கமே அரசியலமைப்புச் சட்டத்தில் ஜாதி இடம் பெறக் காரணமாகும். இந்துக்களுக்கு நன்மை செய்கிறோம் என்று நயவஞ்சக வலையை விரித்து, டிரோஜன் என்ற பொய் குதிரை போல நம்மை வீழ்த்த நினைக்கிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்நூலின் மூலம் தமிழர் தலைவர் அறிவுறுத்துகிறார்.

இன்று உலகிலேய ஒப்பற்றத் தலைவர் நம்முடைய தமிழர் தலைவர் நம்முடைய தமிழர் தலைவர் 93 வயதில் 83 ஆண்டுகளுக் களாக பொதுவாழ்வில்ஈடுபட்டு வருகிறார். அவர் தன்னுடைய உழைப்பால், தொண் டால், செயலால் பெரியாரை உலகமயமாக்கி வருகிறார். 300க்கும் மேற்பட்டஅறிவாராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார் எடுத்துக்காட்டாக “கீதா உபதேசம்” என்ற நூலுக்கு மறுப் புரையாக “கீதையின் மறுபக்கம்” என்ற நூலை கூறலாம். இவர் எழுதிய “வாழ்வியல் சிந்தனைகள்” நூல்கள் இனிய எளிய, நடையில் அமைந்து மக்களின் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளன. இதுவரை 19 நூல்கள் வெளிவந்துள்ளன. இன்று இந்தியாவிலேயே ஒன்றிய அரசின் ஆர்.எஸ்.எஸ். அடாவடி நடவடிக்கைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவராக தமிழர் தலைவர் விளங்கி வருகிறார். அந்த வகையில் அவர் எழுதிய ஆர்எஸ்எஸ் எனும்” டிரோஜன் குதிரை” என்னும் நூல் அனைவராலும் படித்து விழிப்புணர்வு பெற வேண்டிய நூலாகும் என்று கூறி தனது உரையை முடித்தார்.

இந்த நூல் அறிமுக விழாவில் ரிஷிவந்தி யம் ஒன்றிய கழகத் தலைவர் அர. சண்முகம், சங்கராபுரம் நகர கழகத் தலைவர் கலை. அன்பரசு, ஜம்பை கிளைக் கழகத் தலைவர் வை. சந்திரசேகரன், கல்லை தமிழ்ச் சங்க செயலாளர் செ.வ.மதிவாணன், விருதாவூர் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகம் பிச்சை பிள்ளை, கூ.தமிழரசன், கே ஜெகதீசன், ம.செந்தில் குமார், வி.ஆர்.ராஜேந்திரன், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட திராவிடர் கழக தொழிலாளர் அணிச் செயலாளர் பெரியார் செல்வன் நன்றி கூற கூட்டம் இனிதாக முடிந்தது.

சேலம் – அம்மாபேட்டை

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ். எஸ் என்னும் டிரோஜன் குதிரை” புத்தக அறிமுக விழா சேலம் அம்மாபேட்டை பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு மண்டபத்தில் 18.7.2026 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு வழக்குரைஞர் ச.சுரேஷ் குமார் மாவட்ட செயலாளர் பகுத்தறிவாளர் கழகம் வரவேற்புரை ஆற்ற, வேல். சோ. அசோகன் தலைவர் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் தலைமை ஏற்று நடத்தினார்.

சேலம் மாவட்ட கழகத் தலைவர் வீரமணி ராஜூ மற்றும் மேட்டூர் மாவட்ட கழகத் தலைவர் கா.நா.பாலு முன்னிலை வகித்தனர்.

பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வா.தமிழ்ப்பிரபாகரன் தொடக்க உரையாற்றினார்.

பின்னர் பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தி யாயமாக எடுத்து அனைவரும் புரிந்து கொள்ளும்படியாகவிளக்கிக் கூறி நூல் அறிமுக விழாவை சிறப்புற செய்து முடித்தார்.

தோழர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூலை வாங்கிக் கொண்டனர். சேலம் மாவட்ட கழக துணைத் தலைவர் சு.இமயவரம்பன் நன்றியுரை ஆற்றினார்.

திராவிடர் கழகம்

க.கமலம் பொதுக்குழு உறுப்பினர் அயோத்தியாபட்டினம் ஒன்றிய கழகத் தலைவர் டாக்டர் என்.ராஜேந்திரன், வெண்ணந்தூர் செல்வகுமார் சிவப்பிரியன் பேங்க் ராஜு, செழியன் கிருஷ்ணசாமி சாமிக்கண்ணு இளவழகன், சிபூபதி யமுனாதேவி சம்யுக்த ராணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மயிலாடுதுறை

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் மயிலாடு துறையில்  வருவாய் அலுவலர் சங்க அரங்கத்தில் 18.7.2026 சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரெ.செல்லதுரை தலைமை ஏற்க திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாவட்ட செயலாளர் கு.இளமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ஞான.வள்ளுவன் தொடக்க உரையாற்ற கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி நூல் அறிமுக உரையை சிறப்பாக நிகழ்த்தினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் தங்க செல்வராஜ் நன்றி கூறினார்.

திராவிடர் கழகம்

இந்நிகழ்வில் தமிழ் மண் தன்னுரிமை இயக்க அமைப்பாளர் பேராசிரியர் த.ஜெய ராமன், நகர கழகத் தலைவர் சீனி.முத்து, செயலாளர் பூ.சி.காமராஜ், துணைத் தலைவர் இரெ.புத்தன், குத்தாலம் பேரூர் கழகத் தலைவர் சா.ஜெகதீசன், சீர்காழி ஒன்றியத் தலைவர் ஆ சந்திரசேகரன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பூ.பாண்டுரங்கன், வைத்தீஸ்வரன்கோயில் கழகத் தலைவர் வி.ஆர்.முத்தையன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கு.இளஞ்செழியன், சீர்காழி பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீரசேகரன், மேனாள் வங்கி மேலாளர்கள் சே.ஆராமதி, சு.திராவிட மணி, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் வெ.ராமகிருஷ்ணன், கவிஞர் செ.மன்னர்மன்னன், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அரிவளூர் இரா.சுரேஷ்குமார், ந.செ.இளமுருகுச்செல்வன், ஆர்.கதிரவன், உமாசங்கர், நா.இராகவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம்

18.07.2026 சனிக்கிழமை மாலை 6 மணியளவில், காந்தி சாலை, ராஜ்பவன் அரங்கில், காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘ஆர். எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை’ என்னும் நூலின் அறிமுக விழா நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் பா.இளம்பரிதி தலைமை தாங்கினார், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ.முரளி வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கி.இளையவேள், மாவட்டக் காப்பாளர் ச.வேலாயுதம், மாநகரத் தலைவர் ந.சிதம்பர நாதன், மாவட்டத் துணைச் செயலாளர் சீத்தாவரம் ஆ.மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் வி.கோவிந்தராஜ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அ.உதயசெல்வன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் இ.இரவிந்திரன், வாலாஜாபாத் ஒன்றிய அமைப்பாளர் எஸ். செல்வம், க.சேகர், நாகை லெனின், கவிதம்பி, தோழர் பெரியார், மற்றும் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் போளூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழ் உரிமை கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் காஞ்சி அமுதன், திவெக கொள்கை பரப்பு செயலாளர் அஷ்ரஃப், செய்யாறு கழக மாவட்ட பக தலைவர் வடமணப்பாக்கம் வெங்கட்ராமன், அறிவு வளர்ச்சி மன்ற நிறுவனர் நாத்திகம் நாகராசன் ஆகியோர் உரையாற்றினர்.

திராவிடர் கழக தலைமைச் செயற் குழு உறுப்பினரும் உயர்நீதிமன்ற வழக் குரைஞருமான சு. குமாரதேவன் நூல் ஆய்வினையும் தமிழர் தலைவர் ஆசிரியரின் பொதுத்தொண்டை விளக்கியும் ஆர்.எஸ்.எஸ்.சின் இரட்டை வேடம் அம்பலப் பட்டுள்ளது என்பதையும் விளக்கி பேசியது அனைவருக்கும் தேவையான செய்தியாக இருந்தது.

திராவிடர் கழகம்

கூட்டத்தில் செய்யாறு மாவட்ட கழகப் பொறுப்பாளர் பொன். சுந்தர், படப்பை சந்திரசேகரன், தோழர் மைத்திரி அன்பு மற்றும் அவரது குடும்பத்தினர், தோழர் இரவிபாரதி, பிள்ளையார் பாளையம் திமுக தோழர் ஞானம் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் அ.வெ. சிறீதர் நன்றி கூற விழா இனிதே முடிவுற்றது.

புதுச்சேரி

பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் புதுச்சேரி, இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆர். எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக விழா 18.07.2026 சனிக்கிழமை இரவு 7.00 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதுச்சேரி, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் தலைமையில் செயலாளர் பா.குமரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பாளர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி தொடக்க உரை ஆற்றினார்.

திராவிடர் கழகம்

நூல் அறிமுக விழாவில் நூல் பெற்றுக் கொண்ட மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே.அன்பரசன், செயலாளர் தி.இராசா உள்ளிட்டவர்கள் சார்பில் புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி உரையாற்றினார். அதில் ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் தாக்கம் எப்படி எல்லாம் புதுச்சேரி மாநிலத்தை கல்வியில், வேலைவாய்ப்பில் மற்றும் தமிழ் மொழியை நாசப்படுத்தி விட்டது என்பதை விரிவாக எடுத்துக் கூறினார்.

நூல் அறிமுகம் செய்து வைத்து உரை யாற்றிய பேராசிரியர் இராச. குழந்தை வேலனார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட கழகத் துணைத் தலைவர் மு.குப்புசாமி, புதுச்சேரி தன்னுரிமைக் கழக நிறுவுநர் து.சடகோபன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், இரா.திருநாவுக்கரசு, மு.ஆறுமுகம், வி.சி.க. பொறுப்பாளர் மணித்.கோவிந்தராஜ், இர.சாம்பசிவம் உள்ளிட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தோழர்கள் கலந்து கொண்டனர்

நிறைவாக விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்.

அரூர்

அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ஆர். எஸ். எஸ். என்னும் டிரோஜன் குதிரை நூல் வெளியீட்டு அறிமுக கருத்தரங்க விழா நிகழ்ச்சி 18/7/2026ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் அரூர் வி. க.நகர் பிரகாஷ் அகாடமி அரங்கில் நடைபெற்றது.

நூல் வெளியீடு கருத்தரங்க நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அரூர் சா.ராசேந்திரன் தலைமை தாங் கினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் இரா.கோகுல் வரவேற்று பேசினார். கு. தங்கராஜ், மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் வடிவேலன், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பெ.கல் பனா, மாவட்ட மகளிர் அணித் தலைவர் பெ. உமா ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி தொடக்க உரையாற்றினார். மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் கவிஞர் இரா. கண்ணிமை, மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றச் செயலாளர் பாவலர் பெரு. முல்லையரசு ஆகியோர் ஆர் எஸ் எஸ் என்னும் டிரோஜன்  குதிரை நூலை  வெளியிட்டு கருத்துரையாற்றினர்.

மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ்ச் செல்வன் நிகழ்ச்சியை தொகுத்து ஒருங் கிணைத்து நடத்தினார். நூல்களைப் பெற்றுக்க் கொண்டு மாவட்டக் கலைத் துறைத் தலைவர் கீரை.பிரபாகரன், சமூக செயற்பாட்டாளர்  முனைவர் எ.கோ.அம்பேத்கர், சமூக செயற்பாட்டாளர் சமத்துவ படை மாவட்டத் தலைவர் புத்தமணி சாக்ரடீஸ், மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ராஜ்குமார், மொரப்பூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் நாகராஜன், ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இறுதியாக கழகச் சொற்பொழிவாளர் சு.பெ.தமிழமுதன் நூல் அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் அரூர் ஒன்றிய பகுத்தறி வாளர் கழகத் தலைவர் பசுபதி, மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சஞ்சீவன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா ளர் ராஜேஷ்,பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத் தலைவர் பொன்.அய்யனார், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் வெ. சிலம்பரசன், ஒன்றியச் செயலாளர்    சிந்தை பச்சையப்பன், கடத்தூர் நகரத் தலைவர் இரா.நெடுமிடல், திமுக பொறுப்பாளர் என்.டி.குமரேசன், மொரப்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.வித்யாகர், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் துணைத் கோ.தனசேகரன், விடுதலை வாசகர் வட்டப் பொறுப்பாளர் கவிஞர் மு.பிரேம்குமார், வீரப்ப நாயக்கன்பட்டி குமார், ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.நிகழ்ச்சி நடத்த அரங்கம் அளித்து உதவிய பிரகாஷ்-க்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் கழக நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். இறுதியாக மாவட்ட விவசாய சங்கத் தலை வர் கு ராஜகுமாரன் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *