விருத்தாசலத்தில் ஆக. 29இல் பெரியார் இயக்கக் குடும்பங்களின் ஒன்று கூடல் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு

விருத்தாசலம், ஜூலை 20- விருத் தாசலம் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் ஜூலை 19 ஆம் நாள் விருத் தாசலத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெங்கட.இராசா கடவுள் மறுப்பு கூறினார். மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் த.சீ. இளந்திரையன், காப்பாளர் அ. இளங்கோவன், கழகச் சொற்பொழிவாளர் புலவர் வை. இளவரசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன், பொதுக்குழு உறுப்பினர்கள் தங்க.ராசமாணிக்கம், சே.பெரியார்மணி, மாவட்ட துணைத் தலைவர் அ. பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் பி.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று, கூட்டத்தின் நோக்கம் குறித்தும், பெரியார் இயக்கக் குடும்பங்களின் ஒன்று கூடல் விழாவுக்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பளித்து, விழாவை எழுச்சியோடு நடத்துவது குறித்தும், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி சார்பில் நடைபெறும் இருசக்கர பயணக் குழுவினரை வரவேற்று பரப்புரைக் கூட்டங்கள் நடத்து வது தொடர்பாக விரிவாகப் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கழக இளைஞரணிப் பொறுப்பாளர் கா.அறிவழகன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.பெரியார் செல்வனின் தந்தை சோ.ராமன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. சிலம்பரசன் பாட்டி அஞ்சலை, ஒன்றியச் செயலாளர் கா.குமரேசன் பாட்டி நீலாச்சி ஆகியோரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது.

நீட் தேர்வு மற்றும் இ.டபிள்யூ.எஸ் ஆகியவற்றை நீக்கிட  வலியுறுத்தி ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நடைபெறும் இருசக்கர ஊர்தி பரப்புரைப் பயணத்தில் விருத்தாச்சலம் கழக மாவட்டம் சார்பில் 5 தோழர்கள் பங்கேற்பது என்றும் , விருத்தாசலம் கழக மாவட்டத்திற்கு வருகை தரும் பரப்பரைக் குழுவினரை வரவேற்று பரப்புரைக் கூட்டம் நடத்துவதென்றும்,.

ஆகஸ்ட் 29ஆம் தேதி விருத்தாசலம் கழக மாவட்ட பெரியார் இயக்கக் குடும் பங்களின் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அனுமதி அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், பெரியார் இயக்கக் குடும்பங்களின் நிகழ்வினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி கடலூரில் நடைபெறும் எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு மாநாட்டில் விருத்தாசலம் கழக மாவட்டம் சார் பில் திரளாக பங்கேற்பதெனவும், விருத் தாச்சலம் கழக மாவட்டங்களில் உள்ள விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூர், நல்லூர் ஆகிய ஒன்றியங்களில் கலந்துரை யாடல் கூட்டங்களை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் முக்கியப் பகுதியில் பெரியார் பகுத்தறிவுப்பலகைகளை வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் விருத்தாசலம்  நகரச் செயலாளர் மு.முகமது பஷீர், பெண்ணாடம் நகரத் தலைவர் செ.க.ராஜேந்திரன், மங்களூர் ஒன்றியத் தலைவர் சி. சுப்பிரமணியன், கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் த.தமிழ்ச்செல்வன், விருத்தாசலம் ஒன்றியச் செயலாளர் கா.குமரேசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆ.செந்தில், வேப்பூர் வட்டாரச் செயலாளர் ம.இளங்கோவன், ஆவட்டி முருகேசன், கு.தென்னவன், தஞ்சை மாநகரப் பொறுப்பாளர் துரை, இரா. டிராவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவில் நகரத் தலைவர் நா.பசுபதி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *