சென்னை, ஜூலை 18- தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அதே கட்டணத்தில், ஆண்டு முழுவதும் 500 ஆம்னி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயல கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை, அச்சங்கத்தின் நிர்வாகிகள் நேற்று முன்தினம் (17.7.2026) நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சங்கத்தின் தலைவர் பாண்டியன் கூறியதாவது:
அரசுக் கட்டணத்தில்
இயக்கத் தயார்
இயக்கத் தயார்
“விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாகப் பல்வேறு ஆண்டுகளாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 500 பேருந்து களை ஆண்டு முழுவதும் அரசு பேருந்து கட்டணத்திலேயே இயக்குவதற்கு அனுமதி கோரி முதலமைச்சரிடம் விண்ணப்பம் அளித்துள்ளோம். இதுகுறித்து பரிசீலித்து முடிவு சொல்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.”
புதிய பெர்மிட் மற்றும்
சுற்றுலா வளர்ச்சி
சுற்றுலா வளர்ச்சி
ஆம்னி பேருந்துகளுக்கும், சுற்றுலா பேருந்துகளுக்கும் தனித்தனியாக பெர்மிட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சங்கத்தினர் முன்வைத்துள்ளனர். சுற்றுலா பேருந்துகளுக்குத் தனியாக அனுமதி வழங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறை பெரும் வளர்ச்சியடையும், இந்தக் கோரிக்கையும் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இடமாற்ற சதி குறித்துப் புகார்
தொடர்ந்து அவர் கூறும் போது, அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப் பட்டு வருவதால் இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இருப்பினும், தங்களுக்கு ஒத்துழைக்காத நேர்மையான அதிகாரிகளைப் பற்றி இடைத் தரகர்கள் தவறான தகவல்களைப் பரப்பி, அவர்களை இடமாற்றம் செய்ய முயற்சிப்பதாகவும், அரசு இதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
