தமிழ்நாடு – கருநாடக எல்லையில் கன்னட அமைப்புகள் எல்லை அடைப்பு போராட்டம் நடத்துவதால், தமிழ்நாட்டில் இருந்து கருநாடகா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஒசூரில் பேருந்துகள் இன்றி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேகதாது அணை கட்ட எதிர்க்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கன்னட ஒக்கூடா கூட்ட மைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமை யில் அத்திப்பள்ளியில் எல்லை அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தற்கொலை பற்றி பேசினால் பெற்றோரை எச்சரிக்கும் ‘ஏஅய்’
இன்று பலருக்கும் தங்கள் மனக் கவலைகளை கொட்டும் இடமாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (ஏஅய்) மாறியுள்ளது. ஆனால் அது அளிக்கும் தவறான பதில்களால் தற்கொலை, கொலை நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ‘மெட்டா ஏஅய்’-இல் தற்கொலை தொடர்பாக உரையாடல் (Chat) நடந்தால், அதுகுறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை அனுப்பும் அம்சத்தை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக பிரிட்டன், அமெரிக்கா, ஆஸி., கனடா ஆகிய நாடுகளில் இந்த அம்சம் அறிமுகமாகியுள்ளது.
கரோனா இப்போ வேற
மாதிரி இருக்கிறதாம்!
மாதிரி இருக்கிறதாம்!
சாதாரணமாக வரும் காய்ச்சலை போல கோவிட் தொற்று மாற்றமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ‘கோவிட்’ தொற்றால் ஏற்படும் ஆபத்து முன்பை விட தற்போது மிகக் குறைவாகவே உள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கையாக அறிகுறி களை கண்டறிந்து விரைவாக சிகிச்சை பெறுவது அவசியம் எனக் கூறுகின்றனர். ஆந்திரா, கருநாடகாவில் கோவிட் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில் மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
