“எதிர்நீச்சலில் வென்ற பெரியார்“ திறந்த வெளி மாநாட்டை சிறப்பாக நடத்த வலியுறுத்தல்

மதுரை கலந்துரையாடலில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு

மதுரை, ஜூலை 18– திராவிடர் கழக மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 15.7.2026 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை கீழமாசிவீதியில் உள்ள பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் முனைவர்
வீ. அன்புராஜ் தலைமையேற்றார். மதுரை மாவட்ட கழகச் செயலாளர் இரா. லீ. சுரேசு அனைவரையும் வரவேற்றார். கழக தலைமைச்செயற்குழு உறுப்பினர் வே. செல்வம் நிகழ்வினை ஒருங்கிணைத்து, உரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குண சேகரன் கூட்டத்தின் நோக்கம் பற்றிக் குறிப்பிட்டு தொடக்க உரையாற்றினார். சேலம் பொதுக்குழு பற்றியும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான்ங்கள் பற்றியும், ஆசிரியர் அவர்களின் எழுச்சிமிக்க உரைகள் பற்றியும் குறிப்பிட்டார். ஓயாது உழைக்கும் ஆசிரியர் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது பணியாற்று வதை உருக்கமாகக் குறிப்பிட் டார். மதுரைக்கு ஆசிரியர் அவர்கள் ஆகஸ்ட் 21-ம் தேதி வருவதையும் , திறந்த வெளி மாநாடு- எதிர் நீச்சலில் வென்ற பெரியார் என்னும் தலைப் பில் நடைபெறுவதையும் குறிப்பிட்டு அதை மிகச்சிறப் பாக நடத்தவேண்டும். அதற்கு அனைவரும் தங்கள் பங்களிப்பைக் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

முன்னிலை ஏற்று கழகப் புறநகர் மாவட்டத்தலைவர் த. ம. எரிமலை, மாவட்டச்செயலாளர் பா.முத்துக்கருப்பன், மாநகர் மாவட்டக் காப்பாளர் சே. முனியசாமி, மாவட்டத்தலைவர் அ.முருகானந்தம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத்தலைவர் ச. பால்ராஜ், மாவட்டச்செயலாளர் வீர. பழனிவேல்ராசன் ஆகியோர் உரையாற்றினர்.

வழக்குரைஞர் அணி மாநிலத் துணைச்செயலாளர் நா. கணேசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் இரா. திருப்பதி, ந. முருகேசன், பேரா சுப. பெரியார் பித்தன், மாநில மாணவர் கழகத் துணைச்செயலாளர் சீ. தேவராஜ் பாண்டியன், மாநில மகளிரணி அமைப்பாளர் பெ.பாக்கியலெட்சுமி, சொற்பொழிவாளர் அ.வேங்கை மாறன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச்செயலாளர் பாவலர் சுப. முருகானந்தம், தலைவர் முனைவர் வா.நேரு, பொ. பவுன்ராஜ், எ.செல்வப் பெரியார், க.அழகர். ச.வேல் துரை, பேக்கரி கண்ணன், ராக்கு தங்கம், சோ. சுப்பையா, க.நாகராணி, பா. சடகோபன், இரா. அழகுபாண்டி, கா.சிவகுரு நாதன், க.பெரியசாமி, ஜே.எஸ், மோதிலால் ஆகியோர் உரை யாற்றினர்.

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ் நிறைவுரையாற்றினார். அவர் தனது உரையில்

ஆசிரியர் அவர்களின் உடல்நிலை கருதி எப்போதும் தலைமை சொல்வதின் அடிப்படையில் ஆசிரியர் கூட்டங்களை நடத்துபவர்கள் மதுரையில் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தும் மதுரைத் தோழர்களை, பொறுப் பாளர்களைப் பாராட்டினார்.

மாவட்டத்தலைவர் அ. முருகானந்தம் ‘வியப்பின் மறுபெயர் வீரமணி‘ என்று உரையாற்றியதைக் குறிப்பிட்டு ஆசிரியரின் சுற்றுப்பயணம், நினைவாற்றல், 80 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைவர் 80-ஆம் ஆண்டு விழாவிலும் கலந்து கொள்கிறார். இந்தச்சிறப்பு வேறு எந்தத் தலைவருக்கும், இயக்கத்திற்கும் இல்லை. என்று குறிப்பிட்டு தந்தை பெரியார், ஆசிரியர் அவர்களின் தனித்தன்மைகளைப் பட்டிய லிட்டு, ஆசிரியர் அவர்களின் உழைப்பை இன்னும் அதிக அளவில் வெளி உலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகத் தொடர்ச்சியாக 208 இணையவழிக்கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள் என்று அதன் பொறுப்பாளர்களைப் பாராட்டினார். புதுமை இலக்கியத்தென்றலையும் சிறப்பாக நடத்தும் பொறுப் பாளர்களைப் பாராட்டினார்.

வெகு சிறப்பாக மதுரை திறந்த வெளி மாநாடு நடை பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது. அதற்கான கலந்துரையாடல் கூட்ட நிகழ்ச்சி துண்டறிக்கையே இவ்வளவு சிறப்பாக இருக் கிறது என்றால் மாநாடு எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது என்றவர் மிக மகிழ்ச்சியோடு இந்தக் கூட்டத்திலிருந்து விடைபெறுகிறேன் என்று குறிப் பிட்டு ஏறத்தாழ 45 நிமிடங்கள் உரையாற்றினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

சேலம் பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரவேற்பதோடு, அதனை முழுமையாக நிறை வேற்றுவோம்.

மதுரையில் 1946இல் நடைபெற்ற நிகழ்வினை நினை வூட்டக்கூடிய வகையில் ‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார் ‘ என்னும் தலைப்பில் மதுரையில் திறந்த வெளி மாநாடு நடத்த அனுமதி அளித்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

மதுரை முனிச்சாலை ஒபுளா படித்துறை அருகில் ஆகஸ்டு 21-ம் தேதி நடைபெற இருக்கும் திறந்த வெளி மாநாட்டை மிகச் சிறப்பாக ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடத்துவது என்றும்,

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் நடைபெறும் 50 கூட்டங்களின் ஒரு பகுதியாக மதுரை மாநகர் சார்பாக ஜூலை 19இல் நடைபெறும் ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை‘ என்னும் நூல் அறிமுகத்தை, அதே போல் சோழவந்தானில் மதுரை புறநகர் சார்பாக 18ஆம் தேதி நடைபெறும் நூல் அறிமுகத்தையும் சிறப்பாக நடத்துவது என்றும்

திராவிடர் கழக இளை ஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பாக இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணமாக வரும் தோழர்களை வரவேற்று மதுரை அவனியாபுரம், வில்லாபுரம், மதுரை, அழகர்கோயில் போன்ற இடங்களில் சிறப்பாக வரவேற்பு கொடுப்பது என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கூட்டத்தில் இராஜேஸ்வரி இராமசாமி, இராமசாமி, கமல் சந்திரன், சிந்துப்பிரியா, இலக்கியா புதூர் பாக்கியம், முரளி, சிவா, பெரி காளியப்பன், வண்டியூர் கிருஷ்ணமூர்த்தி, போட்டோ இராதா, காண்ட்ராக்டர் சண்முகம், செல்லத்துரை, ஜா. எபினேசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

நிறைவாக மதுரைப் புறநகர் மாவட்ட மாணவர் கழகப் பொறுப்பாளர் சி. நிஷாந்தினி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *