பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவருக்கு தேசிய அளவிலான கருத்தரங்கில் முதல் பரிசு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி “The role of Al in Target Identification and Lead Optimization” என்ற தலைப்பிலான ஒரு நாள் தேசியக் கருத்தரங்கை 11.07.2026 அன்று நடத்தியது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதுநிலை மருந்தியல் மாணவர் எஸ். விக்ரமன் கலந்து கொண்டு தமது ஆய்வுக்கட்டுரையினை சமர்ப்பித்தார். 24 மருந்தியல் கல்லூரிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்ட இப்போட்டியில் எஸ்.விக்ரமன் முதலிடம் பிடித்து நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிசு வென்ற மாணவரை கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *