வல்லம். ஜூலை 17– பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) முதலாமாண்டு பொறியியல் மற்றும் கலை அறிவியல் துறை முதன்மையர்களுக்கு வகுப் புகள் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் போது, ‘பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் எல்லோரும் இந்த ஆண்டு சேர வந்திருக்கிறீர்கள். உங்களை பல்கலைக்கழகத்தினுடைய வேந்தர் என்ற முறையிலும் உங்கள் நல்வாழ்விலும் எதிர்கால வாழ்விலும் மிகுந்த அக்கறை கொண்ட ஒருவன்‘ என்ற முறையில் வருக! வருக!! என வரவேற்கின்றோம்.
தந்தை பெரியார் அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டு இருக்கின்ற இந்த பல்கலைக்கழகம் நகர்புறத்தை நோக்கி அமைக்கப்பட்டதல்ல. இது ஒரு சாதாரணமான கிராமமாக வல்லம் இருந்த போது இங்கு அமைந்ததன் நோக்கமே சுற்றுவட்டாரத்தில் மட்டுமல்ல எங்கும் இருக்கக்கூடிய ஏழை எளிய ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்த விவசாய மற்றும் பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடிய மக்களுடைய பிள்ளைகள் இந்த கல்விநிலையத்தால் பயன் பெற வேண்டும் என்ற லாப நோக்கு இந்த பல்கலைக்கழகத்திற்கு கிடையாது. இந்த பல்கலைக்கழகம் ஒரு தனியாருடைய பல்கலைக்கழகம் அல்ல இது ஒரு பொது சொத்து என்ற அளவிலே மற்றும் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் அருள் கொடையால் உருவாக் கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத் துள்ளீர்கள். அதற்காக உங்களுக்கும், உங்கள் பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாணவ தோழர்களே இங்கு சேர்ந்த வுடனே பல்வேறு வசதிகள் இருக்கின்றன. அவைகளையெல்லாம் நீங்கள் தெளிவாக பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு அமர்ந்துக் கொண்டிருக்கூடிய இணை துணைவேந்தர் பேரா. மல்லிகா அவர்களா னாலும் பதிவாளர் பேரா.பி.கே.சிறீவித்யா அவர்களானாலும் அதுபோல கல்விப்புல முதன்மையர் பேரா.ஏர்.ஆர்.உமையாள் சுந்தரியானாலும் மற்றும் நித்தியானத்தம் ஆனாலும் இன்னும் ஏராளமான பேராசிரியர் பெருமக்களானாலும் விடுதியில் இருக்கக்கூடிய காப்பாளர் ஆனாலும் எல்லோரும் உங்கள் மீது பண்பையும் அன்பையும் கருணையையும் காட்டக்கூடிய ஒத்துழைப்பு தரக்கூடியவர்களாகத் தான் இருப்பார்கள்.
அவர்களை அந்த பார்வையோடு பாருங்கள் பயந்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். இந்த பல்கலைக்கழகம் மக்கள் பல்கலைக்கழகம் டாக்டர் அப்துல்கலாம் போன்றவர்கள் நமக்கு மதியுறிஞர்களாக இருந்து ஆறு ஏழு முறை பல்கலைக்கழகத்தை அறிவுரைக்கூறி வழிநடத்திச் சென்ற பெருமை இப்பல்கலைக் கழகத்திற்கு உண்டு. ஆகவே இப்படிப்பட்ட பல்கலைக்கழகம் எல்லா வகையிலும் மேலோங்கி சிறப்பதற்கு உங்கள் பங்கு மிக முக்கியம். மாணவர்கள் எல்லாத் துறையிலும் இந்த வசதிகள் பெறலாம். வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காகதான் இங்கே ஏறத்தாழ 2200 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மூன்றரைக்கு மேல் வழங்கியிருக்கின்றோம். பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட மகளிர் பேதமில்லாமல், பாலிய பேதமில்லாமல் ஒழுக்கத்தோடும் கட்டுப்பாட்டுடனும் கல்விகள் உங்களுக்கு உரிமையாக்கப்படுகிறது. அந்த வகையிலே அருமை மாணவ தோழர்களே நீங்கள் இங்கே படிக்கும் போது இதை உங்கள் வீடாக கருதுங்கள். கல்வி குடும்பத்தோடு வந்து இணைகிறீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு அங்கே பாதுகாப்பு என்றால் இந்த கல்வி குழுமத்தினுடைய பொறுப்பாளர்கள் அத்துனைபேரும் என்னுடைய துணைத் தலைவர் டாக்டர் வீ.அன்புராஜ் இருந்து ஆரம்பித்து கடைசியாக இருக்கின்ற காவலாளிகள் வரை உங்களுடைய நலனையும், முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் என்றென்றும் பாதுகாக்கக் கூடியவர்களாகவும் அதன்மீது உங்களுடைய பெற்றோர்கள் போலவே அக்கறை செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். எனவே நீங்கள் எதற்கும் தயங்க வேண்டாம், அஞ்ச வேண்டாம். பகுத்தறிவு சிந்தனையோடு நீங்கள் இருக்கவேண்டும். இந்த பல்கலைக் கழகத்தினுடைய மாட்டோ என்ற குறிச்சொல் எப்படி இருக்கும் என்றால் சொன்னால் புதிய சிந்தனை, புது உலகு, முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். புத்தாக்கம் வேண்டும் முதலில் படிப்பதை மனப்பாடம் ஆக்காமல் சிந்தியுங்கள்.
அதற்கடுத்து புத்தாக்கம் வேண்டும் அந்த புத்தாக்கம் வேண்டும். அந்த புத்தாக்கம் உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஆற்றல் இருக்கிறது உள்ளே இருக்கிற ஆற்றலை வெளியே கொண்டு வருவதற்கு தான் இந்த பல்கலைக்கழக படிப்பு எனவேதான் நீங்கள் நமக்கு படிப்பு வராது நமக்கு இந்த பாடம் வராது என்று நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமே இல்லை கடுமையாக உழைக்க வேண்டும் உங்கள் கவன சிதறல்கள் இல்லாமல் எந்த பணிக்கு நீங்கள் உங்களை பெற்றோர்கள் பல்வேறு தியாகங்களுக்கு பல்வேறு கஷ்டங்களுக்கு இடையிலே உங்களை அனுப்பி இருக்கிறார்களோ அதை உணர்ந்து பொறுப்பாக நீங்கள் இருக்கவேண்டும். தொலைப்பேசி போன்ற வைகளை தேவையான அளவுக்கு பயன் படுத்துங்கள் அதில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் அது மூலமாக உங்களு டைய கவன சிதறல்களும் கற்க வேண்டிய நேரமும் வீணாகிவிடும் அதுபோலவே இந்த பல்கலைக்கழக சுற்றுவட்டார வழி இருக்கிறதே இதில் தெளிவாக ஒவ் வொருவரும் கட்டுப்பாடோடு நடந்து கொள்ள வேண்டும். உங்களிடம் எவ்வளவு அன்பு காட்டுகிறோமோ அவ்வளவும் கட்டுப்பாடோடும் இருக்க வேண்டும் என்று இங்கே நிர்வாகம் விரும்பும். ஆகவேதான் கட்டுப்பாடும், ஒழுக்கமும், உழைப்பும் உங்களை உயர்த்தும் என நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் இணை துணைவேந்தர் பேரா.ஆர்.மல்லிகா அவர்கள் உரையில் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு ஒரு புது உலகத்தில் நுழைந்திருக்கக்கூடிய உங்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு, வாழ்வியல் சிந்தனைகளை கற்றுக்கொள்ளும் கல்வி நிலையமாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் நட்பு, குழுப்பணி, மனப்பாண்மை, குணநலன்களை வடிவமைத்துக் கொள்கிறீர்கள். போட்டி நிறைந்த உலகில் எதிர்கொள்ள தங்களை என்னவாக வேண்டுமென்ற குறிக்கோளை அடைவதற்கு முதல் ஆண்டு பயிலும் போதே தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
பல்கலைக்கழக பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா சிறப்புரையாற்றும் போது மாணவர்கள் அணியக்கூடிய சீருடை பற்றியும் நேரம் தவறாமல் வகுப்புக்கு செல்ல வேண்டும் என்றும் மற்றும் பல்வேறு கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் வழங்கப்படுகிறது என்றும் அதற்குரிய நெறிமுறைகளையும் எடுத்துரைத்தார்.
பல்கலைக்கழக கல்விப்புல முதன்மையர் பேரா. உமையாள்சுந்தரி மற்றும் பொறியி யல் துறை முதன்மையர் பேரா. நித்தியா னந்தம் உரையாற்றும் போது கல்லூரியில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பற்றியும் மற்றும் மாணவர்களுக்கு வேண்டிய ஆராய்ச்சி ஆய்வுக்கூடங்களை பற்றி எடுத்துக் கூறினார்.
பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் மாணவ மன்றம் மற்றும் சங்கங்கள் 30க்கு மேற்பட்டவை உள்ளவை என்றும் மாணவர்களுக்கு எந்தத் துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ அந்தத் துறையில் மாணவர் மன்றத்திலோ, சங்கத்திலோ சேர்ந்து தங்களுடைய வெளிபாடுகளை வெளிப்படுத்தலாம் என்றார். இதனைத் தொடர்ந்து இங்கு பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகம் இயங்கி வருகிறது என்றும் இதில் மாணவர்கள் தொழில்முனைவோராக ஆவதற்கு இவ்வணிக காப்பகம் சிறந்த அறிவுரைகளை வழங்கி அதற்குண்டான உதவிகளையும் செய்து மாணவர்களை தொழில்முனைவோராக ஆக்குவதற்கு பெரிதும் பயன்படுகிறது.
இப்பல்கலைக்கழத்தில் பலதுறைகளில் பயிலும் மாணவர்கள் அவர்களுடைய துறைகளை பற்றி கருத்துகளையும், வசதி வாய்ப்புகளையும் பற்றி எடுத்துரைத்தனர்.
