சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் கவனம் செலுத்துவார்களா?

1 Min Read

சென்னை பிராட்வே பேருந்து நிலை யம்  இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டு வரும் நிலையில், அதனைத் தற்காலிகமாக கடற்கரை சாலையிலிருந்து ராயபுரம் செல்லும் குறுகலான பகுதியில் (முன்பு ராயபுரம் குட்ெஷட் இருந்த பகுதிக்கு) மாற்றி, கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, அப்பகுதி கடும் போக்கு வரத்து நெரிசலால் தவிக்கும் சூழலில், அப்பேருந்து நிலையத்திற்கு நேர் எதிரில், இப்ராஹிம் சாஹிப் சாலையிலேயே திடீரென ஒரு கடவுள் சிலை வைக்கப்பட்டு, அடுத்த இரண்டு நாள்களில் அவசர அவசரமாகக் கட்டடப் பணிகளும் நடந்து வருகின்றன.

‘‘நடைபாதைகள் நடக்க மட்டுமே’’ என்று உச்சநீதிமன்றம் அண்மையில்கூட காட்டமாகக் கூறியிருக்கிறது.

சென்னையின் முக்கியமான இப்பகுதியில், வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் சாலை ஆக்கிரமிப்பைத் தடுக்கவேண்டியது யார்?

சென்னை மாநகராட்சியும், தமிழ்நாடு அரசும் கவனம் செலுத்துவார்களா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *