நெகிழிப் பைகளில் பால் வழங்குவது நிறுத்தப்படும்! உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிறுவனம் அறிக்கை

1 Min Read

சென்னை, ஜூலை 15- வனம், வன விலங்கு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச், “ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை ஊர்களில் நெகிழித் (பிளாஸ்டிக்) தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இந்த ஊர்களில் பாலை நெகிழிப் பைகளில் விநியோகம் செய்வதற்கு பதிலாக மாற்று வழியைத் தேர்வு செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், “ஆவின் பால் விநியோகத்துக்கு மீண்டும் தானியங்கி விற்பனை எந்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். சோதனை அடிப்படையில் கொடைக்கானல், ஊட்டி நகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த பகுதிகளில் இந்த எந்திரங்களை அமைக்கவுள்ளோம்.

இதற்காக, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து ஓர் இயந்திரம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் இரண்டு இயந்திரங்களை வாங்கி உள்ளோம்.

இந்த இயந்திரங்களை வைத்த பிறகு, அருகில் உள்ள வீடுகள், உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கு நெகிழிப் பைகளில் பால் வழங்கக் கூடாது என மொத்த விற்பனையாளர்கள், முகவர்கள், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்படும். இயந்திரங்களை அமைத்த பிறகு ஊட்டி, கொடைக்கானலில் நெகிழிப் பைகளில் பால் விற்பனை நிறுத்தப்படும்”என்று கூறப்பட்டிருந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *