சேலத்தில் இருந்து டில்லி, மும்பை, கொல்கத்தாவுக்கு விரைவில் விமான சேவை : விமான நிலைய இயக்குநர் தகவல்

2 Min Read

சேலம், ஜூலை 13- சேலத் தில் இருந்து டில்லி, மும்பை, கொல்கத்தாவிற்கு விரைவில் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய இயக்குநர் நவ்ஷாத் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து தற்போது சென்னை, கொச்சி, பெங்களூரூ, அய்தராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவையை சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து இரவு நேர விமான சேவை மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கடிதம்

இந்நிலையில், மேட்டூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயபாரதி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 4 கேள்விகளை கேட்டு சேலம் விமான நிலைய இயக்குநர் நவ்ஷாத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை மற்றும் மாலையில் விமானம் இயக்க வேண்டும். அதேபோல், சேலத்தில் இருந்து மும்பை, டில்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு புதிய நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்துதல், விமான நிலைய முனைய விரிவாக்கம், பயணிகள் வசதிகள் மற்றும் செயல்பாட்டு வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல். இரவு நேர தரையிறக்க வசதிகளை செய்தல் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதற்கு விமான நிலைய இயக்குநர் நவ்ஷாத் பதில் அளித்து விளக்கம் தெரிவித்துள்ளார்.

டில்லி, கொல்கத்தா, மும்பை

அதில், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் கூடுதல் விமானங்களை இயக்குமாறு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங் களை கேட்டு கொண்டுள்ளோம். சேலம் விமான நிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கம் செய் யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்த பிறகு சேலத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல், இரவு நேரத்திலும் விமானம் தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விமான நிலையம் விரிவாக்கம் செய்வதற்கான தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் பட்டுவாடா கொடுக்கப்பட வில்லை. அந்த பணிகளும் விரைவில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *