சென்னை, ஜூலை 12 பழந் தமிழர் வரலாறு மற்றும் பண் பாட்டை அறிந்து கொள்ள ஆர்வ முள்ளவர்களுக்கு ‘தமிழ்நாடு தொல்லியல் சுற்றுலா’ ஒரு சிறந்த புதையல் வாய்ப்பாக அமைந்துள்ளது.
கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட அகழ்வா ராய்ச்சி தளங்கள் தமிழரின் தொன்மையை உலகுக்கு உணர்த் தும் சான்றுகளாக உள்ளன. இந்த தளங்களை முறையாக மேம்படுத்தி, ‘உலக அகழ்வாராய்ச்சி வல்லுநர் களுக்கும் ஆர்வலர்களுக்கும் சிறந்த தொல்பொருள் சுற்றுலா தளமாக’ மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
என்ன பயன்?
- வரலாற்று விழிப்புணர்வு: பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நேரில் சென்று தமிழரின் 2000+ ஆண்டு நாகரிகத்தை காணலாம்.
- உலக அங்கீகாரம்: சர்வதேச ஆராய்சியாளர்கள் வருகையால் தமிழரின் தொன்மைக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும்.
- பொருளாதாரம்: உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்பு மற்றும் சுற்றுலா வருவாய் பெருகும்.
தொல்லியல் தளங்களை பாதுகாத்து, அருங்காட்சியகங்கள், வழிகாட்டி வசதிகள், டிஜிட்டல் தகவல் மய்யங்களை அமைத்தால் தமிழ்நாடு உலகின் முக்கிய தொல் லியல் சுற்றுலா மய்யமாக மாறும்.
புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா?
தமிழரின் தொன்மையை உலகம் அறியும் வகையில், இந்த தொல்லியல் தளங்களை மேம்படுத்தி சுற்றுலா திட்டமாக அறிவிக்க ‘புதிய அரசு உரிய வழிவகை செய்யுமா’ என்ற எதிர்பார்ப்பு ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது.
