செய்திச் சுருக்கம்

3 Min Read

இருமல் மருந்து விற்பனைக்கு தடை… அரசு அறிவிப்பு

12 சதவீதத்திற்கும் மேல் ஆல்கஹால் கலந்த இருமல் சிரப் & டிஞ்சர்களை மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி விற்கக் கூடாது என மருந்துக் கடைகளுக்கு  ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 30 மில்லிக்கும் அதிகமான பாட்டில்களில் விற்கப்படும் இதுபோன்ற மருந்துகளை வாங்குவோர் விவரங்களை தனி பதிவேட்டில் பராமரிக்கவும் கூறியுள்ளது. தவறான பயன்பாட்டை குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 செலவை ஈடுகட்ட..

கேரளத்தில் மகளிர் இலவசப் பேருந்து பயணத் திட்ட நிதியிழப்பை சமாளிக்க, பயணச்சீட்டு பின்புறம் விளம்பரங்கள் அச்சிட அரசு முடிவு மாதம் ரூ.60 கோடி வரை இலவசப் பயணத்திற்கு செலவாகும் நிலையில், பயணச்சீட்டு விளம்பரம் உள்ளிட்ட முன்னெடுப்புகள் மூலம் அதனை ஈடுகட்ட திட்டம்.

நாள்தோறும் 26,000 பேரை கொல்லும் புற்றுநோய்… பகீர் தகவல்

இதய நோய்க்கு பிறகு உலகளவில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் 2-ஆவது முக்கிய காரணியாக புற்றுநோய் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் 2050-க்குள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 3.5 கோடி பேருக்கு புற்றுநோய்  ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஆண்டுக்கு சுமார் 2 கோடி புதிய பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும் இதனால் நாள் தோறும் 26,000 பேர் உயரிழப்பதாகவும் கூறியுள்ளது.

சென்னை மெரினாவில் ஆட்டிசம் குழந்தைகளின் நீச்சல்..!

சென்னை மெரினா கடலில் ஆட்டிசம் குறை பாடுடைய 39 குழந்தைகள் 2 கிலோமீட்டர் தூர நீச்சலை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். கலங்கரை விளக்கத்தில்  இருந்து  கண்ணகி சிலை வரை கடலலைகளை எதிர்கொண்டு ஒவ்வொரு குழந்தையும் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் இலக்கை அடைந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.

1,979 பணியிடங்கள்..
ஊதியம் ரூ.92,300

டில்லி அரசின் பல துறைகளில் காலியாக உள்ள 1,979 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: அறிவியல் உதவியாளர்,ஃபிட்டர், லிஃப்ட் ஆப ரேட்டர், மெக்கானிக், கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் டிகிரி, அய்டிஅய் படிப்பு வயது வரம்பு: 18-27 ஊதியம்: ரூ.29,200-ரூ.92,300 தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, கணித நுண்ணறிவு தேர்வு விண்ணப்பிக்கும் முறை: இந்த <<inhttps://dsssb.delhi.gov.in/dsssb/vacancy-notice-advertisement-no-032026-various-posts-post-code-2126-4526-closing-date-0>>இணைப்பில் ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கவும்.

பிரபல பின்னணிப் பாடகி
ஜானகி உடலுக்கு அரசு மரியாதை

மறைந்த பிரபல பின்னணிப் பாடகி ஜானகியின் உடலை முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செய்ய கருநாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் அவரது உடல் பொதுமக்கள் மரியாதை செய்வதற்கு வைக்கப்படுகிறது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கனியனகுந்தி என்ற இடத்தில் அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செய்யப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் அநாகரிக நடத்தை

நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசியெறிந்த மனுதாரர்

புதுடில்லி, ஜூலை 12 உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது மனுதாரர் ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையின் போது ஆத்திரமடைந்த மனுதாரர் ஒருவர், *நீதிபதிகள் அமர்ந்திருந்த அமர்வை நோக்கி ஆவணங்களை வீசியெறிந்தார்* என கூறப்படுகிறது.

“நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை உடைந்து விட்டது” என ஆவேசமாக கூறிய அவர், இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. நீதிபதிகள் இது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும், சம்பந்தப்பட்ட மனுதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

நீதிமன்ற நடவடிக்கைகளின் மேன்மைத் தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்தியுள்ளது.

 

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *