மதத்தின் பெயரால் நீர்நிலையை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை!

2 Min Read

போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!! மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை, ஜூலை 12 மதத்தின் பெயரால் நீர்நிலையை மாசு படுத்த யாருக்கும் உரிமை இல்லை!  போர்க்கால அடிப்படையில் மக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றக் கிளை நீதிபதிகள். அதிரடியாக அறிவித்தனர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிவானுபாண்டியன், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ஆனந்த விலாஸ் மண்டபத்தில் இருந்து எங்களை வெளியேறுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கு விசாரணை யின்போது. பாபநாசம் முதல் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கான சடங்குகளைச் செய்வதற்காகக் கூடுகிறார்கள் என்று தாமிரபரணி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

டன் கணக்கில் அகற்றப்பட்டுள்ளன

இந்தச் சடங்குகளின்போது. ஆடைகள், துண்டுகள், செருப்புகள், இறந்தவர்களின் பொருட்களை ஆற்றில் வீசும் வழக்கம் உள்ளது. தாமிரபரணியில் வீசப்பட்ட ஆடைகள் டன் கணக்கில் அகற்றப்பட்டுள்ளன. தாமிரபரணி ஆறு இரு வகையான ஆமைகளின் வாழ்விடமாக உள்ளது. இவற்றின் சராசரி ஆயுட்காலம் நூறு ஆண்டு களுக்குக் குறையாது. ஆனால், ஆமைகள் ஆற்றில் வீசப்பட்ட ஆடைகளில் சிக்கி இறக்கின்றன. ஒளிப்படங்களின் சட்டங்களைக்கூட ஆற்றில் வீசுவதால் கண்ணாடி உடைந்து நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாசுபடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. மதத்தின் பெயரால்கூட நீர்நிலையை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை என்பதைச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. நீர்நிலையை அழித்து வருவதால், நாங்கள் இதில் தலையிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இறந்தவர்களின் ‘ஆன்மாக்களை’ திருப்திப்படுத்து கிறோம் என பொருட்களை ஆற்றில் வீசுவதா? இந்த பழக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும், மற்றவர்களின் உரி மைகளை மீறாமலும் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தங்க ளுக்குப் பயனளிக்கும் செயல்களை செய்யலாம். ஆனால், இறந்தவர்க ளுக்கு சடங்குகளைச் செய்வதற்காக கோடிக்கணக்கான மக்களின் தேவையை நிறைவு செய்யும் வற்றாத ஜீவநதியாகத் திகழும் தாமிரபரணி ஆறு மாசுபடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

இந்த வழக்கை வருகிற 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பிப்போம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *