வல்லம், ஜூலை 9- தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் செயல்பட்டு வரும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் (ECE) துறையைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள், தென் கொரியாவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான Infac India Pvt. Ltd., சென்னை நிறுவனத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சியில் (Internship) இணைந்துள்ளனர்.
Infac India Pvt. Ltd.,
1998-ஆம் ஆண்டு சென்னை யில் தொடங்கப்பட்ட தென் கொரியாவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான Infac India Pvt. Ltd., உலகத் தரத்திலான வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.
இந்நிறுவனம் கண்ட்ரோல் கேபிள்கள் (Control Cables), பேட்டரி கேபிள்கள் (Battery Cables), இக்னிஷன் கேபிள்கள் (Ignition Cables), ஆண்டெனா அமைப்புகள் (Automotive Antenna Systems), ஹார்ன்கள் (Horns) உள்ளிட்ட பல்வேறு ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து, இந்தியா மற்றும் உலகின் முன்னணி வாகன உற்பத்தி யாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த தொழிற்பயிற்சியின் மூலம் மாணவர்கள் “படிக்கும் போதே சம்பாதிக்கும்” (Earn While You Learn) என்ற சிறப்பான வாய்ப்பைப் பெற்றுள்ள னர். தொழிற்பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்கு மாதந் திர உதவித்தொகை (Stipend), இலவச உணவு வசதி மற்றும் தொழில்துறையில் நேரடி செய் முறைப் பயிற்சி வழங்கப்படுகிறது.
எதிர்கால வேலைவாய்ப்பிற்கு…
மாணவர்களின் தொழில்திறன், வேலைவாய்ப்புத் திறன் மற்றும் தொழில்துறை அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்த ஓராண்டு தொழிற்பயிற்சி, அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பிற்கு வலுவான அடித்தளமாக அமையும்.
இந்த சிறப்பான தொழிற்பயிற்சி வாய்ப்பை ஏற்படுத்திய தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DoTE), Board of Apprenticeship Training (BOAT – Southern Region) மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான Infac India Pvt. Ltd. ஆகியோருக்கு கல்லூரி நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் மனிதவள(HR) குழுவினர் மற்றும் இக்கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை விரிவுரையாளர் / இண்டர்ன்ஷிப் SPOC இரா. சந்திரசேகரன் கலந்து கொண்டார்.
மேலும், இந்த வாய்ப்பைப் பெற்ற மாணவர்களை இக்கல் லூரியின் ஆற்றல் மிகு தாளாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள், முதல்வர் க.ப.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் கோ.இராஜாராமன், விரிவுரை யாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரி வித்தார்கள்.
