வென்றது சமூக நீதி! சத்தியமங்கலத்தில் ஆடு மேய்த்த சிறுமி… இன்று மராட்டிய மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர்!

சத்தியமங்கலம், ஜூலை 9– ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை சேர்ந்தவர் வான்மதி. அவரது தந்தை ஒரு ஓட்டுநர். அவர் காலையில் பள்ளிக்கு சென்று நன்றாக படித்து வந்தார்.

மாலை பள்ளி முடிந்ததும், மற்ற குழந்தை களுடன் விளையாட செல்லாமல், தனது குடும்ப ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டே அந்த பகுதியில் படித்து வந்தார்.

முதுகலை பட்டம் பெற்றார்

வழக்கம் போல பள்ளிப் படிப்பை முடித்தவுடன், வான்மதியின் திருமணம் குறித்து குடும்பத்தினர் பேசத் தொடங்கினர். ஆனாலும், அவரது குடும்பத்தாரின் உறுதுணையோடு, தனது விடாமுயற்சியால் கணினி பயன்பாட்டியலில் முதுகலை பட்டம் பெற்றார்.

இதோடு நிறுத்தாமல், தனது கனவான மாவட்ட ஆட்சியர் படிப்பிற்காக தீவிரமாகத் தயாராக தொடங்கினார்.

152-ஆவது இடம்

இதற்காகப் பல மணி நேரம் அயராது உழைத்த அவர், தோல்விகளைக் கண்டு தொய்வடையாமல், கடந்த 2015-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதில் அகில இந்திய அளவில் 152-ஆவது இடத்தை பிடித்தார் வான்மதி!

வர்தா மாவட்ட ஆட்சியர்

ஆடு, மாடு மேய்த்து கொண்டே படித்து, இன்று ஒரு மாவட்டத்தின் ஆட்சியராக உயர்ந்திருக் கும் வான்மதியின் இந்த சாதனைப் பயணம், தடைகளை உடைத்து சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகச்சிறந்த உத்வேகமாகும்.

தற்போது மராட்டிய மாநிலம் வர்தா மாவட்ட ஆட்சியராக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *