மயிலை சீனிவேங்கடசாமி 1900ஆவது ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார்.
இவரின் கல்வி 10 ஆம் வகுப்பு – வரைதான். பின்னர் இடைநிலை ஆசிரியராகவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர். திருமணம் செய்து கொள்ளவில்லை.
படித்தது பத்தாம் வகுப்பு என்றாலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இணையாக இவர் ஆய்வுப் அறிஞராகத் திகழ்ந்தார்.
இவர் நீதிக்கட்சிக் காலத்தில் வெளிவந்த ‘திராவிடன்’, பெரியாரின் ‘குடிஅரசு’ ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றும், கட்டுரைகள் எழுதியும் வந்தார்.
“வேதம், புராணம், கடவுள், கோயில், விதி, வினை என்று சொல்லிக் கொண்டு நாளுக்கு நாள் முட்டாள்களாகிக் கொண்டிருக்கும் வழக்கத்தை விட்டுவிட்டு எந்த விசயத்தையும் பகுத்தறிவுக் கொண்டு ஆராயும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்று “குடிஅரசு” இதழில் எழுதிய பகுத்தறிவாளர் இவர்.
பார்ப்பனர்களிடமிருந்து இறையிலி நிலங்கள் பிடுங்கப்பட்ட சமணர்களின் காலமே களப்பிரர்களின் ஒளிமிக்க காலம் என்று உறுதிபடக் கூறினார்.
மயிலை சீனி. வேங்கடசாமி நினைவு நாள் இன்று (8.7.1980).
