மேனாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மகளிருக்கான மாத உதவித் தொகைத் திட்டம் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பாராட்டு

2 Min Read

புதுடில்லி, ஜூலை 8 தமிழ் நாட்டில் மேனாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட மகளிருக்கான மாத உதவித் தொகைத் திட்டம் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ‘மகளிர் உரிமைத்தொகை திட்டம்’ இன்று நாடு முழுவதும் ஒரு புதிய பொருளாதாரப் புரட் சியை ஏற்படுத்தியுள்ளது. 2026 நிதியாண்டில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் இத்தகைய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
மொத்தப் பயனாளிகள்: சுமார் 12 கோடி பெண்கள்.

ஆண்டுச் செலவு: சுமார் ரூ. 1.7 லட்சம் கோடி. மாநில அளவிலான நலத்திட்டச் செலவினங்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக இது மாறி யுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய பொரு ளாதார மாற்றம் ஏற்பட்டு இருப் பதும், குடும்பங்களின் செலவுகள் குறைந்து, பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக மகாராட்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் பெண் பயனாளிகளின் சேமிப்பு மற்றும் நுகர்வில் வியக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வங்கி இருப்புத் தொகை அதிகரிப்பு மாத இறுதியில் கணக்கில் உள்ள இருப்புத் தொகை மகாராட்டிராவில் சுமார் 84%வரையிலும், ஒடிசாவில் 45% வரையிலும் அதிகரித்துள்ளது. இது ஒரு பயனாளிக்கு முறையே சுமார் ரூ. 6,884 மற்றும் ரூ.6,887 என்ற கூடுதல் தொகையைக் குறிக்கிறது. மாதாந்திர நுகர்வுச் செலவு: மகாராட்டிராவில் 46% மற்றும் ஒடிசாவில் 28% நுகர்வுச் செலவுகள் அதிகரித்துள்ளன.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள்இத்திட்டத்தின் மூலம் பெண்களிடையே ஏடிஎம் (ATM) மற்றும் யுபிஅய் (UPI) பயன்பாடு பெருமளவு அதிகரித்துள்ளது. வாழ்க்கை முறை சார்ந்த தேவைகள், மருத்துவம் மற்றும் கல்விக்கான செலவுகளில் தரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில ஆய்வு விவரம் கல்விச் செலவுகள்: ஏடிஎம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கல்விச் செலவுகள் 18%-லிருந்து 24%-ஆக உயர்ந்துள்ளது. வாழ்க்கை முறை செலவுகள்: யுபிஐ பரிவர்த்தனைகள் மூலம் இவை 37%-லிருந்து 42%-ஆக அதிகரித்துள்ளன. மருத்துவச் செலவுகள்: 8%-லிருந்து 10%-ஆக உயர்ந்துள்ளது.

ஆலோசனைக் குழுவின்
முக்கியப் பரிந்துரைகள்

மாறிவரும் குடும்பச் செலவினப் போக்குகளுக்கு ஏற்ப, தற்போதைய பணப்பரிமாற்றத் தொகைகள் போதுமானதா என்பதை அவ்வப்போது மறுஆய்வு செய்து தொகையை உயர்த்த வேண்டும். தகுதியான பெண் பயனாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட பலன்கள் மற்றும் துணைச் சேவைகளை வழங்க, செயல்திறன் மிக்க நிதி மேலாண்மை மற்றும் சரியான இலக்கு நிர்ணயம் அவசியம்.

இத்திட்டத்தை வெறும் பணப் பரிமாற்றத்தோடு நிறுத்தாமல், விருப்பத்தின் பேரில் திறன் மேம்பாடு, டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் சுயஉதவிக் குழுக்களுடனான இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி மறுவடிவமைப்பு செய்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

பெண்களின் கைகளில் நேரடியாக வழங்கப்படும் இந்த வருவாய் ஆதரவு, குடும்ப நலனை மேம்படுத்துவதற்கும், பாலின அடிப்படையிலான பொருளாதார விலக்கத்தைக் குறைப்பதற்கும் ஒரு சக்திவாய்ந்த மற்றும் செலவு குறைந்த கருவியாகத் திகழ்கிறது.
இவ்வாறு பிரதமரின் பொருளா தார ஆலோசனைக் குழு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *