முதலமைச்சர் – அமைச்சர் நிகழ்ச்சிகளில் பேனர்கள், கட் அவுட் வைக்கக்கூடாது : ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியல்

சென்னை,மார்ச்17- எந்த நிகழ்ச்சி களுக்கும் பதாகைகள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது; மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் 

ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2019-இல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பதாகைகள் மற்றும் கட் அவுட் கலாச் சாரத்தின் காரணமாக கோவையி லும், சென்னையிலும் இருவர் உயிரி ழந்த போது, ‘திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச் சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பதாகைகள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கழக நிர் வாகிகள் அனைவரையும் நான் ஏற்கெனவே பல முறை அறிவுறுத்தி யிருக்கிறேன். இதனை மீறி வைக்கும் திமுக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’  என்று தி.மு.க. தலைவர் 13-_9_-2019 அன்று அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கை வெளிவந்த நாள்முதல் திமுக நிர்வாகிகள் மற்றும்  தோழர்கள் பெரும்பாலோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற் படுத்தும் வகையில் பதாகைகள்,  கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்காமல், திமுக தலைவரின் ஆணையை பின்பற்றி வந்தனர். இதற்கு மாறாக, பதாகைகள் வைத்த திமுக நிர்வாகிகள் சிலர்மீது  தி.மு.க. தலைமைக் கழகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், தற்போது ஒரு சிலர், தலைவர் உள்ளிட்ட அமைச் சர்கள், தி.மு.க. முன்னோடிகள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சி களிலும், பொதுமக்கள் முகம் சுளிக் கும் வண்ணம் பதாகைகள் கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைத் திருப்பதாக தி.மு.க. தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத் துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத் திலும் பதாகைகள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்றும்; பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பதாகைகள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் – மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில்   வைக்கக் கூடாது என்று திமுக தலைவரின் ஒப்புதலோடு அறிவிக்கிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறியதாக தி.மு.க. தலைமைக் கழகத்தின் கவனத்திற்கு வருமேயானால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; தி.மு.க. தலைமைக் கழக மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட தி.மு.க.  நிர்வாகிகள் அனை வரும் எனது இந்த அறிவுரையை கிஞ்சிற்றும் மீறாமல் கடைப்பிடித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என் பதை நிலைநாட்டிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *