சென்னை, ஜூலை 5 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் பெற்று, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர் களின் தேர்வு முடிவுகள் பிற்பகல் வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் ஒளி நகல் பெற்ற தேர்வர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க கடந்த ஜூன் 17 முதல் ஜூன் 23 வரை யிலும், பின்னர் மாணவர் களின் நலன் கருதி ஜூன் 25 அன்றும் கால அவ காசம் வழங்கப்பட்டது. இக்காலக் கட்டத்தில், பாடவாரி யாக மொத்தம் 8,682 விண்ணப்பங்கள் பெறப் பட்டன. இதில் மறுமதிப்பீட் டிற்கு 7,931 விண்ணப்பங் களும், மறுகூட்டலுக்கு 751 விண்ணப்பங்களும் சமர்ப் பிக்கப்பட்டிருந்தன.
மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்
தற்போது இந்த மறுமதிப் பீடு மற்றும் மறுகூட்டல் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதி வெண்களின் பட்டியல் பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.
முக்கியக் குறிப்பு
தேர்வர்கள் தங்களுடைய பதிவெண் (Registration Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங் களுக்கு தேர்வர்கள் 9498383075, 9498383076 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
