சீருடையுடன் கடைகளில் பொருள் வாங்கக் கூடாது! போக்குவரத்து காவல் துறையினருக்கு கூடுதல் ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 4- சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக அண்மையில் பொறுப் பேற்ற சாமுண்டீஸ்வரி, போக்குவரத்து காவல் துறையினருக்கு ‘வாக்கி-டாக்கி’ மூலம் பல்வேறு ஒழுக்க விதிமுறைகள் மற்றும் பணிக்கான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்ப தாவது: சட்டம்-ஒழுங்கு காவல் துறையினரை விட, பொதுமக்களை அதிகமாக சந்திக்கும் வாய்ப்பு போக்குவரத்து காவலர்களுக்கே உள்ளது.

தற்போது பெரும்பாலானோர் கைப்பேசி பயன்படுத்துவதால், நல்ல செயல்களையும் தவறான செயல்களையும் உடனுக்குடன் காட்சிப் பதிவு எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்.

எனவே, பொதுமக்களிடம் காவல் துறையினர் மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். சிலர் சீருடையை சுத்தமாக அணியாமல் பணியில் ஈடுபடுவது கவலைக்குரியது. அனைத்து போக்குவரத்து காவல் நிலையங்களிலும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மேலும் பெண் காவலர்கள் பணியில் இருக்கும் போது நகைகள் அணியக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதை கடைப்பிடிக்க வேண்டும். மெரினா கடற்கரை காமராஜர் சாலை வழியாக நான் ஒருமுறை சென்றபோது போக்குவரத்து காவலர் ஒருவர் சீருடையுடன் கடையில் மீன் வாங்கிக் கொண்டிருந்ததை பார்த்தேன்.

பணியில் இருந்தாலும், பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாலும், சீருடை அணிந்த நிலையில் எந்தக் கடையிலும் பொருட்களை வாங்கக் கூடாது.

சீருடையுடன் பணம் கொடுத்து பொருட்கள் வாங்கினாலும், பொதுமக்கள் அதை இலவசமாக வாங்குவதாக தவறாக கருதும் வாய்ப்பு உள்ளது.

ஒரு காவலரின் தவறான செயல், ஒட்டுமொத்த காவல் துறையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் என்பதால், அனைவரும் தங்களது நடத்தை மற்றும் ஒழுக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த உத்தரவுகளை அனைத்து போக்குவரத்து காவல் துறையினரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு கூடுதல் காவல் ஆணையர் சாமுண்டீஸ்வரி அறிவுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *