ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

1 Min Read

சென்னை, ஜூன் 27– ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  தொடர்ந்து அசல் சான்றிதழ் சரிபார்ப்பு விரைவில் நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரி களில் உதவிப் பேராசிரியர் நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கடந்த 2025ஆம் ஆண்டு டிச.27ஆம் தேதி நடத்தப்பட்டது. அத்தேர்வை 42,064 பேர் எழுதினர். இந்நிலையில், இறுதி விடைக்குறிப்பு அடிப்படையில் வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு தேர்வெழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிடப் பட்டுள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு

பணி அனுபவத்துக் கான மதிப்பெண் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அசல் கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் கல்வித் தகுதிகள் தொடர்பான அனைத்துச் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அசல் ஆவணங்கள் சரிபார்ப்புக்குப் பிறகு அளிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அசல் ஆவணங்கள் சரிபார்ப்புக்கான இடம், தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *