கடல்சார் தொழில்நுட்ப மய்யத்தில் பணி வாய்ப்பு!

2 Min Read

ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள புவி மண்டல அறிவியல் கவுன்சிலின் ஒரு அங்கமான சென்னை, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் தற்போது பல்வேறு ஆலோசனைத் திட்டங்களுக்காக, ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியிடங்களுக்கு இணையவழி மூலம் விண்ணப்பங் களை வரவேற்கப்படுகிறது.

இதுபற்றிய விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NIOT/E & P/02/2026 (PROJECT) பணி: Project Engineer – I காலியிடங்கள்: 10

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.56,000

தகுதி: சிவில் இன்ஜினியரிங், ஓசன் இன்ஜினியரிங்.ஸ்டக்சரல் இன்ஜினியரிங், கோஸ்டல் இன்ஜினியரிங், போர்ட் & ஆர்பர் இன்ஜினியரிங், ஜியோஇன்பர்மேடிக்ஸ், ஜியோமேடிக்ஸ் பி.இ. / பி.டெக். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: பிராஜெக்ட் இன்ஜினியரிங்  அசோசியேட். காலியிடம்: 1 வயது: 40-க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ..42.000

தகுதி: மெரின் பையலஜி, மெரின் சயின்ஸ்-இல் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டென்னிகல் அசோசியேட் – 11. காலியிடம்: 1 (UR). வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.35,000

தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி, ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், சாப்ட்வேர் சிஸ்டம்ஸ், இன்பர்மேடிக்ஸ் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னிகல் அசோசியேட் – 1 காலியிடங்கள்: 3

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ. 31,000

தகுதி: எலெக்ட்ரானிஸ் & கம்யூனிகேசன், எலெக்ட்ரானிஸ் & இன்ஸ்ருமெண்டேசன் பிரிவில் 60 சதவித மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் விலங்கியல், மெரின் சயின்ஸ் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: புராஜெக்ட் இன்ஜினியரிங் அசிஸ்டெண்ட். காலியிடம்: 1. வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.20.000

தகுதி: எலட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன், எலட்ரானிக்ஸ் & இன்ஸ்ருமெண்டேசன் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: புராஜெக்ட் அட்மினிஸ்ட்ரேசன் அசிஸ்டெண்ட். காலியிடங்கள்: 3 (UR)

வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.20,000

தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.niot.res.in/recruit mentdetails.php என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கவும். இணைய வழியில் விண்ணப்பித்தவுடன் அதனை பதிவிறக்கம் செய்து, அதைப் நிறைவு செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து தேர்வில் கலந்து கொள்ளவும்.

தேர்வு நடைபெறும் நாள்: 6.7.2026 முதல் 10.7.2026

தேர்வு நடைபெறும் இடம்: National Institute of Ocean Technology, NIOT Campus, Velachery – Tambaram Main Road, Chennai-600 100.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *