புதுடில்லி, மார்ச் 21- வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கடந்த ஆகஸ்ட் 9, 2020 முதல் டிசம்பர் 11, 2021 வரை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டில்லியின் எல்லை களில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் ஒன்றிய அரசு அந்த 3 சட்டங்களை திரும்பப் பெற்றது. அப்போது, ஒன்றிய அரசால் எழுத்துப் பூர்வமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனப் புகார் உள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்துவ தற்காக டில்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நேற்று (20.3.2023) கூடியது.
இதற்கான ஏற்பாடுகளை சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) செய்திருந்தது. இதில், ஆயிரக்கணக்கான விவ சாயிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்தும் பி.ஆர்.பாண்டியன் தலை மையில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின ஒருங்கிணைப்பு குழு சார்பில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
முன்னதாக ராம்லீலா மைதானத்தில் கூடிய விவசாயிகள், ஒன்றிய அரசுக்கு எதி ராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடு பட்டனர். இதைத் தொடர்ந்து மேதா பட்கர், டாக்டர் தர்ஷன் பால் உள்ளிட்ட பல்வேறு விவ சாய சங்கங்களின் தலைவர்கள் உரையாற்றினர்.
மகாபஞ்சாயத்து முடிந்த பிறகு, அதன் பிரதிநிதிகள் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நேற்று (20.3.2023) மதியம் நேரில் சந்தித்தனர். அப்போது, அரசின் வாக்குறுதிகளை நிறை வேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்த இருப்ப தாக ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அவ்வாறு வாக்குறுதிகளை நிறை வேற்றாவிட்டால், ஏப் ரல் 30இ-ல் விவசாயிகள் பெரிய அளவில் டில்லியில் மீண்டும் கூட இருப்பதாக அறிவிக்கப் பட்டது.
இதுகுறித்து தமிழக விவ சாய சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, ‘‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. வாக்குறுதியை நிறைவேற்றா மல் தப்பிக்க பார்க்கிறது. மரபணு மாற்று விதைகளை வேளாண்மையில் அனுமதித்து மண்ணையும் மக்களையும் அழிக்க நினைக்கிறது. கார்ப்ப ரேட் நிறுவனங்களிடம் விவ சாயிகளை அடிமைப்படுத்த முயற்சிக்கிறது’’ என்றார்.
சுவாமிநாதன் ஆணைய அறிக்கை அமலாக்கல், விவசாயிகள் மீதான வழக்குகள் மற் றும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 திரும்பப் பெறுதல், ஓய்வூதியம் ஆகி யவை விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. லக்கிம்பூர்கேரியில் விவசாயி கள் மீது வாகனம் ஏற்றிக் கொன்ற புகாரில் கைதானவ ரின் தந்தையான அஜய் மிஸ் ராவை ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது. மேலும், போராட் டத்தின்போது இறந்த 740 விவசாயிகளின் குடும்பத்தின ருக்கு நிவாரண நிதி உள்ளிட்ட கோரிக்கைகளும் இடம் பெற் றுள்ளன.
நேற்று நடைபெற்ற மகா பஞ் சாயத்துக்கு பின் டில்லியின் எல்லைகளில் மீண்டும் போராட்டம் நடத்தத் திட்ட மிடப்பட்டிருந்தது. இதை எதிர்பார்த்து ஒன்றிய அரசும் 2 ஆயிரம் காவலர்களை குவித் தது. ஆனால், பஞ்சாப் விவசாயிகளில் பலரும் இதில் கலந்து கொள்ளவில்லை. அந்த மாநி லத்தில் பிரிவினைவாதி அம் ரித்பாலை கைதுசெய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதால் அந்த மாநில விவசாயிகள் இதில் பங்கேற்கவில்லை.