பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி

1 Min Read

பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் 2026 ஆம் ஆண்டில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 100 ஜூனியர் டெலிகாம் அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஜூலை 3ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு விளம்பர எண்.: BSNL CO-11/12(11)/1/2026-RECTT-CO)

பணி: ஜூனியர் டெலிகாம் அதிகாரி

காலியிடங்கள்: 100 ஊதியம்: மாதம் ரூ.16,400 – ரூ.40,500

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேசன்,  ரேடியோ தொழில்நுட்பம் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இணைய வழி எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் முக்கிய பொறியியல் பாடத்திலிருந்தும், பொது அறிவுப் பிரிவிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.2,000. எஸ்சி, எஸ்சி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கான கட்டணம் ரூ.1,000 மட்டும். கட்டணத்தை இணைய வழி முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.7.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *