பாப்பிரெட்டிப்பட்டியில் எழுச்சியுடன் நடைபெற்ற டாக்டர் கலைஞர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

அரூர், ஜூன் 14- திராவிடர் எழுச்சி நாள், தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பரப்புரை பொதுக்கூட்டம் 9.6.2026 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் மாவட்ட கழகச் செயலாளர் கு.தங்கராஜ் தலைமையில், ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் பொன் பொன்.அய்யனார் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் வேங்கை தமிழ்ச் செல்வன், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் வெ.சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவரும் திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளருமான அரூர் சா. ராசேந்திரன், மாவட்ட கலைத்துறை தலைவர் கவிஞர் கீரை. பிரபாகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

நிறைவாக மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, கழக சொற் பொழிவாளர் காஞ்சி கதிரவன் ஆகியோர்  சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் தென்றல் பிரியன், வெங்கட் சமுத்திரம் தோழர் அன்புச்செல்வி, திமுக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சதா சுர்ஜித், விடுதலை வாசகர் வட்டப் பொறுப்பாளர் கவிஞர் பிரேம் குமார், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் பாளையம் பசுபதி, மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்  ஜீவிதா மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் ராஜவேந்தன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *