அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

1 Min Read

சென்னை, ஜூன் 14- நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்களில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பதிவுக் கால முறையில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்ற விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.chennai.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களை பெறலாம்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை வரும் 29ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *