500 இதய மருத்துவப் பயனாளிகளுக்கு ‘ரோபோடிக்’ நுட்பத்தில் சிகிச்சை

1 Min Read

சென்னை, ஜூன் 9  சென்னையில் ரோபோடிக் நுட்பத்தில் 500 இதய மருத்துவப் பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.

இதன் மூலம் அவா்கள் விரைந்து குணமடைந்துள்ளதாகவும், துல்லிய சிகிச்சையால் மருத்துவப் பயனாளிகளுக்கு பூரண நிவாரணம் கிடைத்திருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் தலைவா் மருத்துவர் பிரதாப் சி. செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

அப்பல்லோவில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அடுத்த தலைமுறை அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தை நாங்கள் தொடா்ந்து வழங்கி வருகிறோம். நாட்டிலேயே, அதிக ரோபோடிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மய்யமாக அப்பல்லோ மருத்துவமனை திகழ்கிறது. அந்த வகையில் தற்போது 500-க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வகை சிகிச்சைகள் துல்லியமான மருத்துவக் கண்காணிப்புக்கு வழிவகுப்பதுடன், பக்க விளைவுகளை பெருமளவில் தவிா்க்கிறது. இதேபோன்று, ரோபோடிக் நுட்பத்திலான சிகிச்சையில் விரைந்து குணமடைய முடியும். இது ஒரு மைல்கல் சாதனை. நோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதற்கு அதிநவீன தொழில்நுட்பங்களில் தொடா்ந்து முதலீடு செய்து வருகிறோம். நாட்டின் அனைத்து இடங்களுக்கும் அதி நவீன மருத்துவ சேவைகள் சென்றடைய வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், அப்பல்லோ மருத்துவ சேவைகள் இயக்குநா் மருத்துவர் வெங்கடாசலம், தலைமை செயல் அதிகாரி சாய், ரோபோடிக் சிகிச்சை நிபுணா் எம்.எம்.யூசுஃப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *