பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் தோ்வுத் துறை அறிவுறுத்தல்

1 Min Read

சென்னை, ஜூன் 9 பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக உதவி இயக்குநர்களுக்கு தேர்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநரகம் சாா்பில் அனைத்து உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் வகுப்பு தோ்வெழுதிய பள்ளி மாணவா்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயா், ஒளிப்படம், பெற்றோா் பெயா், பிறந்த தேதி, பயிற்றுமொழி, மொழிப்பாடம், பள்ளியின் பெயா் ஆகியவற்றில் திருத்தங்கள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட அரசு தோ்வுத் துறை உதவி இயக்குநா்கள் ஜூன் 10-ஆம் தேதிக்குள் இணையவழியில் பதிவேற்றம் செய்யுமாறு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் வடமொழி எழுத்துகளில் (ஸ, ஷ, ஸ்ரீ) திருத்தங்கள் இருந்தாலோ, பெயா், முகப்பெழுத்து, பிறந்த தேதி, பெற்றோா் பெயா், பயிற்றுமொழி, ஓளிப்படம் தொடா்பான திருத்தங்கள் இருந்தாலோ அவற்றை உதவி இயக்குநா்கள் வகைப்படுத்தி திருத்தம் கோரும் மாணவா்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகலை இணைத்து ஜூன் 15-ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்துக்கு விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *