தொடங்கியது ‘எல் நினோ’ : பசிபிக் பெருங்கடலில் கடும் வெப்பம் பவளப்பாறைகள் அழியும் அபாயம்

2 Min Read

வாசிங்டன், ஜூன் 6– உலக வெப்பமயமாதல் காரணமாக உல களாவிய வானிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் 2 முக்கிய நிகழ்வுகள், லா-நினோ’ மற்றும் ‘எல் நினோ’,

இவற்றில் லா நினோ இந்தியா வுக்கு மழையை கொடுக்கும். எல் நினோ வறட்சியை கொடுக்கும். இவை இரண்டும் இயற்கையாகவே நடக்கும் சுழற்சிகள் என்றாலும், தற்போதைய உலக வெப்பமயமாதல் காரணமாக இவற்றின் தீவிரம் மற்றும் கணிக்கமுடியாத தன்மை அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பசிபிக் பெருங்கடல்

இந்தநிலையில், உலகையே அச்சுறுத்த வரும் எல் நினோ விளைவுகள் தொடங்கிவிட்டதாக அய்ரோப்பிய வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.

பசிபிக் கடல் மேற்பரப்பில் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதே எல் நினோ எனப்படுகிறது. அதன்படி, கடந்த மே மாதத் தொடக்கத்தில், பசிபிக் கடல் நீரின் மேற்பரப்பு வெப்பம் மோசமான அளவான 0.5 சென்டிகிரேட் என்பதைத் தொட்டது. இதனால் எல் நினோ உருவானதாக அறிவிக்கப்பட்டது.

பல்வேறு வானிலை ஆய்வு மய் யங்களும் இந்த வெப்ப அளவானது மே மாத இறுதிக்குள் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

மே 24ஆம் தேதி நிலவரப்படி, இந்த வெப்பநிலை 0.67 சென்டிகிரேட் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருந்தது.

எல் நினோ விளைவு

இன்று உலகம் முழு வதும் சுற்றுச்சூழல் நாள் கொண்டா டப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக எல் நினோ விளைவு தொடங்கியிருப்பது குறித்த அய்ரோப்பிய வானிலை மய்யம் குறுகிய கால வானிலை முன்னறிவிப்பினை வெளியிட்டது. இன்றைய பசிபிக் கடலின் நீர்மேல் பரப்பின் வெப்பம் அதிகரித்திருப்பது, எல் நினோ விளைவு தொடங்கி விட்டதற்கான அறிகுறி என அ ய்ரோப்பிய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய சராசரி வெப்ப நிலை வழக்கத்தைவிட மிக அதிகமாக உயரும். பல நாடுகளில் கோடைகாலம் மிகக்கொடூர முகத்தை காட்டும். ஆஸ்திரே லியா, இந்தோனேசியா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படும். மழை பொய்த்துப் போவதால் காட்டுத்தீ பரவும். குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் காட்டுத்தீ அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

வழக்கமாக வறண்டிருக்கும் தென் அமெரிக்க நாடுகள் (பெரு, ஈக்வடார் போன்றவை) மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் கணிக்க முடியாத அளவுக்குப் பெருமழை கொட்டி வெள்ளக் காடாகி மிதக்கும். குறிப்பாக அய்ரோப்பா, ஆசியாவில் தீவிர வெப்ப அலைகள், சில பகுதிகளில் தீவிர வறட்சி மற்றும் வெப்பம், சில இடங்களில் அதீத மழை மற்றும் திடீர் வெள்ளம் போன்றவையும் நிகழும்.

பவளப்பாறைகள் அழியும்

இதுதவிர கடல் நீர் அதிக வெப்பமாவதால், பவளப்பாறைகள் அழியும். மீன்கள் குளிர்ந்த நீரைத் தேடி வேறு இடங்க ளுக்குச் சென்றுவிடுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் தோன்றும் ஒரு தற்காலிக காலநிலை மாற்றம் மட்டுமல்ல; அது உலக வெப்ப மயமாதலால் பூமி நமக்குக் கொடுக் கும் இறுதி எச்சரிக்கை ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *