தமிழ்நாடு முழுவதும் 7 மாவட்ட பதிவாளர்கள், 43 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்

1 Min Read

சென்னை, ஜூன் 4 தமிழ்நாடு  வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை வடக்கு தணிக்கை மாவட்ட பதிவாளர் சீதாலட்சுமி, தாம்பரம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், தாம்பரம் தணிக்கை மாவட்ட பதிவாளர் சுனிதா, அம்பத்தூர் சார்பதிவாளராகவும், திண்டுக்கல் தணிக்கை மாவட்டப் பதிவாளர் பெரியசாமி, கோவை இணை சார்பதிவாளர் 1 ஆகவும், மார்த்தாண்டம் தணிக்கை மாவட்டப் பதிவாளர் செல்வக்குமாரி, பாளையங்கோட்டை நிர்வாக மாவட்டப் பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் தணிக்கை மாவட்டப் பதிவாளர் சிவக்குமார், ஈரோடு இணை சார்பதிவாளர்1 ஆகவும், காரைக்குடி மாவட்டப் பதிவாளர் இயலரசி, திருச்சி இணை சார்பதிவாளர்1 ஆகவும், தஞ்சாவூர் தணிக்கை மாவட்டப் பதிவாளர் செந்தில்நாதன், திருச்சி தணிக்கை மாவட்ட பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல பதிவுத்துறை அய்ஜி அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கோபிச்செட்டிபாளையம் இணை 1 சார்பதிவாளர் ராஜமுனியப்பன், சிறீபெரும்புதூர் சார்பதிவாளராகவும், திருவள்ளூர் பேரம்பாக்கம் சார்பதிவாளர் முகமது ரபி, திருக்கழுக்குன்றம் சார்பதிவாளராகவும், கோவை வடவள்ளி சார்பதிவாளர் கிருஷ்ண சாமி, ஆவடி சார்பதிவாளராகவும், கோவை அன்னூர் சார்பதிவாளர் எஸ்.என்.ராஜா, செங்கல்பட்டு இணை 2 சார்பதிவாளராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தென் சென்னை இணை 1 சார்பதிவாள ராகவும், குன்றத்தூர் சார்பதிவாளர் கண்ணன், வேளச்சேரிக்கும், தென் சென்னை நிர்வாக சார்பதிவாளர் சரவணன், குன்றத்தூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை நீலாங்கரை சார்பதிவாளர் சண்முகம், தென் சென்னை சீட்டு மற்றும் சங்கத் திற்கும், தென் சென்னை சீட்டு மற்றும் சங்க சார்பதிவாளர் அசோக்குமார், நீலாங்கரைக்கும் பணியிட மாற்றம் செய் யப்பட்டுள்ளனர். இதேபோல், தமிழ்நாடு முழுவதும் 43 சார் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *