தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

1 Min Read

அணி அணியாகத் திரளுகிறார்கள்! கருநாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து
மே-31 திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில்

திராவிடர் கழகம்

27-05-2026 அன்று நாகை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று கழகத் தோழர்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

திருமருகல் ஒன்றியம்: புத்தகரம், திருமருகல்,மருங்கூர் கொட்டாரக்குடி

கீழ்வேளூர் ஒன்றியம்: ஒக்கூர், கடம்பங்குடி, கீழ்வேளூர், குருக்கத்தி,செருநல்லூர்

மேற்கண்ட கிராமங்களுக்கு சென்று திராவிடர் கழகத்தோழர்கள் மற்றும் தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள், பொதுமக்களைச் சந்தித்து, பெருந்திரளாகப் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றி அடையச்செய்ய அழைப்பு கொடுக்கப்பட்டது.
மகிழ்வுடன் வரவேற்று “93 வயதில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உறுதியாக பெருந்திரளான மக்களுடன் பங்கேற்போம்” என உறுதி அளித்தனர்.

போராட்ட அழைப்பிற்கான பயணத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், விவசாய தொழிலாளரணி மாநிலச் செயலாளர் வீ.மோகன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி ஆகியோர் இச்சுற்றுப்பயணத்தில் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *