திராவிடர் கழக தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழக எழுச்சி நாள், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103 -ஆம் ஆண்டு பிறந்த நாள், தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் 103 கூட்டங்கள் நடத்திட அறிவித்துள்ளார்கள்.
அரூர் கழக மாவட்டத்தில் 5.6.2026 மற்றும் 9.6.2026 ஆம் தேதிகளில் பரப்புரைக் கூட்டம் நடத்த தேதி ஒதுக்கி உள்ளார்கள்.
எனவே மேற்கண்ட நிகழ்ச்சி நடத்துவது குறித்து 27.5.2026 புதன்கிழமை மாலை 4 மணி அளவில் பாப்பி ரெட்டிப்பட்டி பெரியார் படிப்பகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து கழக அணி தோழர்களும் பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அழைப்பு: அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட கழக தலைவர், கு.தங்கராஜ் மாவட்ட கழக செயலாளர், அரூர் கழக மாவட்டம்
