அய்.நா.வில் காலநிலை மாற்றம் வரலாற்று சிறப்பு தீர்மானம்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வாசிங்டன், மே 25- காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைப் பாதுகாக்கத் தவறும் நாடுகள், பன்னாட்டு சட்டங்களை மீறியதாகக் கருதப்படும் என்று பன்னாட்டு நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தது.

தற்போது அய்.நா அவையில் காலநிலை மாற்றத்தை தடுக்க தவறும் நாடுகள் பன்னாட்டுச் சட்டத்தை மீறியதாகக் கருதப்படும் என தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மா னத்திற்கு ஆதரவாக 141 நாடுகளும், எதிராக 8 நாடுகளும் வாக்களித்துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

அய்தராபாத்தில் உள்ள
மருத்துவப் பயனாளிக்கு சீனாவில் இருந்து அறுவை சிகிச்சை செய்த இந்திய மருத்துவர்

பெய்ஜிங், மே 25- அய்தரா பாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவ பயனாளிக்கு மயக்க மருந்து கொடுத்து நுட்பமான அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் 3டி கேமராக்களுடன் ரோபோ கருவிகளை பயன்படுத்தி மருத்து வர்களும், செவிலியர்களும் காத்திருந்த நிலையில் சீனாவின் வுகானில் உள்ள டாங்ஜி மருத்துவமனையில் இருந்து நிகழ் நேர 3டி படங்களை பார்த்து ரொபோட் கைகள் உடன் இந்தியாவை சேர்ந்த சிறுநீரக நிபுணர் சையது முகமது காவுஸ் என்பவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

சீனாவின் வுகான் நகரில் இருந்து ரோபோட் உதவியுடன் அய்தராபாத்தில் உள்ள நோயாளிக்கு அவர் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள சீனா செய்தி தொடர்பாளர் யூ ஜிங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவாக்கப்பட்ட அதிநவீன ரோபோட் அமைப்புகள் மற்றும் அதிவேக 5ஜி (5G) இணைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ பயனாளிக்கு மாற்று  சிறுநீரக குழாய் பொருத்தும் அறுவை சிகிச்சை 90 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி
தாக்குதல் – 4 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ, மே 25- உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் வான்பரப்பில் ரஷ்யா தனது அதிந வீன ஒரேஷ்னிக் ஹைப்பர்சோனிக் ஏவுகணையைப் பயன்படுத்தி மிகப்பெ ரிய தாக்குதலை நடத்தியுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த வான்வழித் தாக்குதல், இந்த நான்கு வருடப் போரிலேயே மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்த ஒரேஷ்னிக் ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்கு வேகமாகப் பாயக்கூடியது. இது விண்கல் போல மிக அதிவேகமாகப் பயணிப்பதால், தற்போதைய எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பாலும் இதைத்தடுத்து அழிக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

உக்ரைன் போரில் ரஷ்யா இந்த பயங்கரமான ஏவுகணையைப் பயன்படுத்துவது இது மூன்றாவது முறை ஆகும். ஒரே இரவில் 600 தற்கொலை டிரோன்கள் மற்றும் 90 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவிப்பெரும் தாக்குதலை நடத்தியது. இந்த மிகப்பெரிய தாக்குதலில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *