கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.5.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ஜூனில் இந்தியா கூட்டணி கூட்டம் மம்தா தகவல். பாஜகவை வீழ்த்துவதற்கான கூட்டு வியூகம் பற்றி விவாதிக்க அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடக்கிறது என மம்தா கூறியுள்ளார்.

* நீட் தேர்வு ரத்து எதிரொலி: 12 நாட்களில் 5 மாணவர்கள் தற்கொலை.

* கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தோற்றம், இளைஞர்களிடையே வேலையின்மை பிரச்சினையின் எதிரொலி, பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் பாஜக விமர்சனத்திற்கு மாறாக கருத்து.

தி இந்து:

* ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை காங்கிரஸ் ஓயாது: ராகுல் காந்தி. “தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையிலும்,  நீட் போன்ற தேர்வு வினாத்தாள் கசிவுகளை தடுப்பதற்கான ஒரு முழுமையான, பிழையற்ற அமைப்பு உருவாக்கப்படும் வரையிலும் நாங்கள் ஓயமாட்டோம்,” என்று ராகுல் காந்தி தனது ‘X’ (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

* பிரதமர் மோடி இதுவரை ஒரே ஒரு திறந்த பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்தாதது வருந்தத்தக்க உண்மை: இந்தியப் பதிப்பாளர்கள் சங்கம் (EDITORS GUILD OF INDIA) வருத்தம்.

தி டெலிகிராப்:

* ‘நெருங்கிய நண்பரை திருப்திப்படுத்தும்’ முயற்சி: ரூபியோவின் 500 பில்லியன் டாலர் வர்த்தக கூற்று தொடர்பாக பிரதமர் மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ். இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ‘மக்கள் விரோதமானது’ மற்றும் ‘ஆபத்தானது’, அதனை நிராகரிக்கும் துணிவை மோடி அரசு ஏன் வெளிப்படுத்தவில்லை என தகவல் தொடர்புப் பிரிவு பொறுப்பாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.

* ஆர்.எஸ்.எஸ்.-உடன் தொடர்புடைய ”ஜன்ஜாதி சுரக்ஷா மன்ச்” பிரதிநிதிகளுக்கு பள்ளிகளில் தங்கு மிடம் அளிக்க 72 அரசுப் பள்ளிகள் டில்லியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன; பொதுக் கல்வி நிறுவனங்களின் வசதிகளை இவ்வாறு பயன் படுத்துவது ‘முறைகேடான செயல்’ என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *