சென்னை, மே 25 மருத்துவமனை, மாநகராட்சிக் கூட்டம், குடிநீர் வழங்கல் பிரிவு என பல்வேறு இடங்களில் ‘சோதனை’ என்ற பெயரில் அடாவடி செய்த தவெக நிர்வாகிகள், தற்போது அரசு அதிகாரியின் வீடு தேடிச் சென்று அச்சுறுத்தியுள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதி யில் கடந்த சில நாள்களாக திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நள்ளிரவு நேரத்தில் மின்சாரத்துறை உதவி பொறியாளர் தினேஷ் என்பவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவரது வீட்டின் கதவை நீண்ட நேரமாக பலமாகத் தட்டி, உள்ளே இருந்த வர்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உதவி பொறியாளரின் மனைவி மங்கையர்கரசி அளித்துள்ள புகாரில், ‘‘நள்ளிரவு நேரத்தில் அடை யாளம் தெரியாத நபர்கள் திடீரென எங்கள் வீட்டின் கதவைத் தட்டி, எங்களுக்கு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தினர். இதனால் எங்கள் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் பயமும் அடைந்தோம்’’ என்று கூறி யுள்ளார்.
நள்ளிரவில் அரசு அதிகாரியின் வீட்டின் கதவைத் தட்டி, குடும்பத்தி னரை மிரட்டி அச்சுறுத்திய நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மங்கையர்கரசி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்ட தவெகவினர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்ப டுத்தியுள்ளது.
