சென்னை, மே 25 – தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்து 15 நாட்கள் ஆகும் நிலையில், தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு பிரச்சினை தொடர்கதையாக உள்ளன. ஒரு சில இடத்தில் 4 முதல் 6 மணி நேரம் வரையும், சில இடத்தில் தினமும் 10 முறையும் மின் தடை ஏற்படுகிறது. இதனையும் தாண்டி சில இடங்களில் ஒரு நாள் முழுவதும் மின் தடை ஏற்படு வதால், இரவில் புழுக்கம் காரணமாக மக்கள் தூங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதன் நீட்சியாக, தண்டை யார்பேட்டை, தண்டையார் நகர் மெயின் தெருவில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். வழக்கம் போல மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால், பதிலளிக்காமல் இருந்துள்ளனர். இதனால், நேரடியாக மின் வாரிய அலுவலகம் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், எண்ணூரில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் மின்தடை செய்யப்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எண்ணூர் விரைவு சாலையில் அமர்ந்து வாகனத்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதனால் எண்ணூரில் இருந்து திருவொற்றியூர், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் செல்ல முடியாமல் வரி சையில் நின்றன.
அதேபோல், அம்பத்தூர் பகுதி, பாடி மண்ணூர்பேட்டை கொரட்டூர், பட்டரவாக்கம், மாதனாங் குப்பம், கள்ளிக்குப்பம் காந்திநகர் புதூர், அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையம், அத்திப்பட்டு போன்ற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது.
குறிப்பாக இரவு 10 மணிக்கு ஏற்படும் மின்வெட்டு நள்ளிரவு ஒரு மணி வரை நீடிக்கிறது. பின்னர் மீண்டும் அதிகாலை 4 மணிக்கு ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டு 5 மணிக்கு மின்சாரம் வருகிறது. இதே போன்று பகல் நேரங்களிலும் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது.
இதனால், கோடை கால புழுக்கத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், “கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் ஒரே வார்த்தையில் ‘ஓவர் லோடு’ என்று கூறுகிறார்கள். உயர் அழுத்த மின்சார வயர் அறுந்து விழுந்த பிரச்சினையில் நேற்று முன்தினம் (23.5.2026) கள்ளிக்குப்பம் கங்கை நகரில் வீடுகளில் உள்ள ஏ.சி., பிரிட்ஜ், டி.வி. ஆகியவை வெடித்து சிதறியது. கடந்த ஒரு வாரமாக பகலில் வெயிலின் புழுக்கத்தில் அவதிப்படும் நாங்கள் இரவு நேரத்தில் தூக்கத்தைத் தொலைத்து அவதியுறுகிறோம்” என்றனர்.
இராயபுரம், கொடிமரத் தெரு, பென்டன் தெரு, ஏ.ஜே., காலனி ஆகிய தெருக்களில், 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மின்தடை ஏற்பட்டது.
மின் தடை குறித்து, அப்பகுதி மக்கள், இராயபுரம் பனைமரத் தொட்டி யில் உள்ள மின்சார அலுவலகத்தை கைப்பேசியிலும், தொலைபேசியிலும் மாறி மாறி தொடர்பு கொண்டபோதும், அலுவலர்கள் அழைப்புகளை ஏற்க வில்லை.
இதனால் பெண்கள், தங்களது குழந்தைகளுடன், தெருக்களில் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டது. தொடர் மின் தடையால், தண்ணீர் இல்லாமல் கழிப்பறைக்குச் செல்ல முடியாமல், பெண்கள் அவதியடைந்தனர்.
கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் ‘பீடர்’ எனும் மின்னூட்டியில் கோளாறு ஏற்பட்டு பல இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் ஏற்படும் திடீர் மின் வெட்டால், பொதுமக்கள் மட்டுமின்றி மின்வெட்டினால் மருத்துவமனை களில் மருத்துவப் பயனாளிகள் அவ திக்குள்ளாகி யுள்ளனர்.
மின்துறை அமைச்சரோ மின் வெட்டினை துரிதமாக சீர் செய்ய நட வடிக்கை எடுக்காமல் ஆள் பற்றாக் குறை, மின் சாதனங்கள் பழுது என்று அலட்சியமாக பதிலளிக்கிறார்.
