தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

தூத்துக்குடி, மே 23- தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவ ஒளிப்படதிற்கு மெழுகுவத்தி ஏந்தி, மலர்கள் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட் டத்தில் 7 பேர் நடத்திய துப் பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தார் நூற்று கணக்கானோர் காய மடைந்தனர்.

இந்த சம்பவத்தில் 8ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (22.5.2026) அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி தூத்துக்குடி பாத்திமா நகர் கிறித்துவ கோயில் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள அரசு இந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீதும் மற்றும் வருவாய் துறை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத் துள்ளனர்.

மேலும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் களின் நினைவாக மணி மண்டபம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *