ஆவடி, மே 23- ஆவடி பெரியார் மாளிகையில் 20.05.2026 புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஆவடி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.சோபன்பாபு தலைமையில் நடைபெற்றது.
பெரியார் பிஞ்சு பி.ஆதித் தமிழச்சி கடவுள் மறுப்பு கூறியவுடன் தொடங்கியது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட இளைஞரணித் துணைச் செயலாளர் சா.ச.சென்னகிருட்டிணன் வரவேற்று உரையாற்றினார். கழக இளைஞரணியின் ஆக்கப் பணிகள், இளைஞரணியினை வலுப்படுத்துவதற்கான நோக்கம் குறித்து திராவிடர் கழக இளைஞரணி மாநில இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் விரிவாக சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து கூட்டத்தில் முன்னிலை வகித்த மாவட்ட ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இளைஞரணி வலுப்படுத்துவதற்கான தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.அனைவரின் கருத்த்துக்களைத் தொடர்ந்து கீழக்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
ஆவடி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகள் மற்றும் ஒன்றியங்களில் சுவரெழுத்துப் பிரச்சாரம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆவடி மாவட்ட இளைஞரணி யின் சார்பாக மாதந்தோறும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப் பட்டுள்ளது.
இளைஞரணித் தோழர்கள் அறிவியல், பகுத்தறிவு சார்ந்து உண்மை இதழிலில் கட்டுரை எழுதுவதென்றும், விடுதலையில் வெளிவரும் ஞாயிறு மலர் கேள்வி – பதில் பக்கத்திற்கு கேள்வி அனுப்புவதென்றும் தீர்மானிக்கப் படுகிறது.
ஆவடி மாவட்த்தில் உள்ள கழகப் பொறுப்பாளர்கள்,தோழர்களுக்கு சமூக வலைதளம் மற்றும் இணைய தளப் பயிற்சி நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஜெயராமன், அம்பத்தூர் நகர செயலாளர் அய்.சரவணன், அம்பத்தூர் நகர் திராவிட மகளிர் பாசறை செயலாளர் எஸ்.ராதிகா, மு.இரவீந்திரன், அம்பத்தூர் சு.மணி வண்ணன், மதுரவாயல் மு.பிரகாஷ், பா.வெங்கடேஷ், மோ.பிரதாப் ஆகியோர் தங்களை கருத்துக்களைத் தெரிவித்தனர். இறுதியாக பழ.நல்.முத்துக்குமார் நன்றி கூறியவுடன் கூட்டம் முடிவுற்றது.
