கோவையில் 10 வயது சிறுமி படுகொலை: ‘‘உண்மையான நீதி வேண்டும்’’ உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

கோவை, மே 23 கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை ஆவேசமாகப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இக்கொடூரச் சம்பவத்திற்கு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லா பக்கமும் ஒலிக்கிறது’’  என்று மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் அவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *